சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2025ம் ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 படிநிலைகளைக் கொண்டது. இந்த தேர்வின் மூலம் 979 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
முதல்நிலைத் தேர்வு வருகிற மே 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பிப்போர் யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான https://upsc.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணபிப்போர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்டி,எஸ்சி உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இத்தேர்விற்கு 21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரை காலை 9.30 முதல் 11.30 வரை முதல்தாள் பொது அறிவு தேர்வும், பிற்பகலில் 2.30 மணி முதல் 4.30 மணி வரை திறனறி 2ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. தேர்விற்கு விண்ணப்பிப்போர் தங்களது மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி வைத்து மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கு தேவையான சான்றிதழ்களை தேவையான அளவில் பென் டிரைவில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு மொத்தம் 80 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!
ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
{{comments.comment}}