ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?

Jun 22, 2025,11:22 AM IST

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் இணைந்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் அதி நவீன குண்டு வீச்சு விமானங்கள், ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது குண்டு வீசி தாக்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.


இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்கா போரில் நுழைய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க இரண்டு வாரங்கள் ஆகும் என்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தார் டொனால்ட் டிரம்ப். இந்த நிலையில் தற்போது திடீரென அமெரிக்காவும் தாக்குதலில் இறங்கியுள்ளது.


அமெரிக்க போர் விமானங்கள் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் "மிகவும் வெற்றிகரமான தாக்குதலை" நடத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.  1979ம் ஆண்டு நடந்த ஈரான் புரட்சிக்குப் பிறகு, இப்போதுதான் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.


ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஒரு அற்புதமான ராணுவ வெற்றியாகும். மத்திய கிழக்கின் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஈரான் இப்போது அமைதிப்  பாதைக்குத் திரும்ப வேண்டும். அதைச் செய்யாவிட்டால், எதிர்கால தாக்குதல்கள் மிகவும் பெரியதாகவும், எளிதாகவும் இருக்கும். மேலும் பல இலக்குகளை நாங்கள் குறி வைத்துள்ளோம். அமைதி விரைவாக வரவில்லை என்றால், அந்த மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் தாக்குவோம். அவற்றில் பெரும்பாலானவற்றை சில நிமிடங்களில் அகற்ற முடியும், என்றார் அவர்.




எந்தப் பாதிப்பும் இல்லை - ஈரான் தகவல்


அமரிக்காவின் இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட அணு சக்தி நிலையங்கள் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டன. எனவே இந்த தாக்குதலால் எந்தப் பாதிப்பும் இல்லை. மக்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஈரான் தரப்பு விளக்கியுள்ளது.


ஈரானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானங்கள் மீண்டும் பத்திரமாக திரும்பி விட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


நெதன்யாகு பாராட்டு


அமெரிக்கப் படைகள் ஈரானிய அணுசக்தி தளங்களைத் தாக்கிய பிறகு, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டொனால்ட் டிரம்பைப் பாராட்டினார்.


வாழ்த்துக்கள், அதிபர் டிரம்ப். ஈரானின் அணுசக்தி வசதிகளை அமெரிக்காவின் மகத்தான மற்றும் நியாயமான வலிமையுடன் இலக்கு வைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும். அதிபர் டிரம்பும் நானும் அடிக்கடி கூறுவது போல முதலில் வலிமை வருகிறது, பிறகு அமைதி வருகிறது. இன்று இரவு, டொனால்ட் டிரம்பும் அமெரிக்காவும் நிறைய வலிமையுடன் செயல்பட்டனர் என்று கூறினார்.


ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக வேறு ஏதாவது பெரிய நாடு இணைந்தால் இது பெரிய உலகப் போராக மாறக் கூடிய அபாயங்கள் உள்ளன. ஏற்கனவே அமெரிக்கா இதில் நேரடியாக தலையிடக் கூடாது என்று ரஷ்யா எச்சரித்திருந்தது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

news

கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்த தவறான மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்டது மெட்டா!

news

திமுக அரசு தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல: டாக்டர் அன்புமணி

news

நீலகிரி, கோவைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

news

புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)

news

திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

news

Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி தயார்..! நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்