டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதற்காக அந்த நாட்டு அரசால் திருப்பி அனுப்பப்பட்ட 205 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். 2வது முறையாக அதிபராகியுள்ள டிரம்ப் எடுத்த எடுப்பிலேயே அதிரடியைக் காட்டத் தொடங்கியுள்ளார். அவற்றில் முக்கியமானதாக , பிறப்புரிமை அடிப்படையில் தானாக அமெரிக்க குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிபர் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 மாகாண அரசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, டிரம்ப்பின் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், இது அரசியல் அமைப்பு சட்டத்தற்கு எதிரான உத்தரவு என்றும், தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருப்பதாகவும், இப்படியொரு அரசியமைப்பிற்கு முரணான வழக்கை பார்த்தது இல்லை என்றும், அமெரிக்க குடியுரிமை சட்டங்களை மறுவரையறை செய்யும் டிரம்பின் முயற்சிக்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
இந்த நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வருகிறார் டொனால்ட் டிரம்ப். இந்த சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 205 இந்தியர்களை அமெரிக்க அரசு இன்று நாடு கடத்தியுள்ளது. அமெரிக்கா விமான படைக்கு சொந்தமான சி 17 போர் விமானத்தில் நாடு கடத்தப்பட்ட 205 இந்தியர்களும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு இன்று மதியம் வந்தடைந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த கிராமங்களுக்கு காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்கா அதிபராக டொனால்ட டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தியர்களை கையில் கைவிலங்குடன் விமானத்திற்கு அழைத்து வரப்பட்ட வீடியோ காட்சிகள் பரபரப்பையும் கண்டனனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}