பிறப்புசார் குடியுரிமை ரத்து.. அதிபர் டிரம்ப் உத்தரவிற்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை

Jan 24, 2025,03:45 PM IST

வாஷிங்டன்: பிறப்புசார் குடியுரிமை ரத்து என்ற அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிற்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். 2வது முறையாக அதிபராகியுள்ள டிரம்ப் எடுத்த எடுப்பிலேயே அதிரடியைக் காட்டத் தொடங்கியுள்ளார். பதவிக்காலம் முழுவதும் அனல் பறக்கும் என்பதை அவரது பேச்சிலேயே வெளிப்படுத்தியிருந்தார் டிரம்ப். அதைத் தொடர்ந்து அவர் பல்வேறு முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 80 உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை முந்தைய ஜோ பிடன் ஆட்சியில் நடைமுறையில் இருந்த உத்தரவுகளை மாற்றும் உத்தரவுகளாகும்.




குறிப்பாக, பிறப்புரிமை அடிப்படையில் தானாக அமெரிக்க குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு அங்கு தங்கியுள்ளவர்களுக்கு குழந்தை பிறந்தால், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை கருத்தில் கொள்ளாமல் அந்த குழந்தைக்கு தானாக அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்ட நடைமுறை தற்போது இருந்து வருகிறது. இது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளதுதான்.


ஆனால் இந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, பிப்ரவரி 19ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால், அதற்குள் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் பிற நாட்டுப் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


இந்நிலையில், அதிபர் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 மாகாண அரசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, டிரம்ப்பின் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி டிரம்ப்பின் உத்தரவை அமல்படுத்துவதற்கு 14 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில்,  இது அரசியல் அமைப்பு சட்டத்தற்கு எதிரான உத்தரவு என்றும், தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருப்பதாகவும், இப்படியொரு அரசியமைப்பிற்கு முரணான வழக்கை பார்த்தது இல்லை என்றும், அமெரிக்க குடியுரிமை சட்டங்களை மறுவரையறை செய்யும் டிரம்பின் முயற்சிக்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்