சென்னை: சென்னையில் காயமடைந்த அமெரிக்கர் ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக முயன்றபோது அவர் ஆம்புலன்ஸ் கண்ணாடிக் கதவை உடைத்து வெளியே குதித்து தப்பி ஓடி விட்டார்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் 26 வயதான கியானி மார்செலோ. இவர் தனது நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சென்னை வந்திருந்தார். பெரியமேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். புதன்கிழமை மாலை 3 மணியளவில் தனது அறைக்குத் திரும்பினார் மார்சலோ. நல்ல குடிபோதையில் அவர் இருந்ததால், அவரை ஹோட்டல் ஊழியர்கள் கைத்தாங்கலாக அறைக்குக் கொண்டு போய் விட்டனர்.
இந்த நிலையில் அன்று நள்ளிரவுக்கு மேல் தலையில் பலத்த காயத்துடன் தனது அறையிலிருந்து ஹோட்டல் லாபிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த ஹோட்டல் ஊழியர்கள், ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். அவர் ஹோட்டல் அறைக்குள் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. ஆம்புலன்ஸ் வந்ததும் அவரை அதில் ஏற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆம்புலன்ஸ் ரிப்பன் பில்டிங்கைத் தாண்டியிருக்கும். திடீரென மார்செலோ ஆம்புலன்ஸ் கண்ணாடிக் கதவை உடைத்து, ஓடும் வண்டியிலிருந்து வெளியே குதித்தார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது அல்லிக்குளம் கோர்ட் வளாக பார்க்கிங் பகுதியில் மார்செலோ பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். தற்போது பலத்த பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!
21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!
பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
{{comments.comment}}