டெல் அவிவ்: அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி ஜிஜி ஹாடிட், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலைக் கடுமையாக கண்டித்துள்ளார். இதை இஸ்ரேல் அரசு விமர்சித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மாடல் அழகி ஜிஜி ஹாடிட் எனப்படும் ஜெலீனா நோரா. இவர் டிவி நடிகையும் ஆவார். சர்வதேச மாடல் அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலையும், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலையும் கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார் ஜிஜி ஹாடிட்.
இதுதொடர்பாக அவர் போட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதவில், இந்த நியாயமற்ற சோகத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அப்பாவிகளின் உயிர்கள் எடுக்கப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது வேதனை தருகிறது. பாலஸ்தீன போராட்டத்தின்போது பாதிக்கப்படுவோருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் அடைந்து வரும் துயரங்களுக்கு நான் அனுதாபம் தெரிவிக்கிறேன். ஆக்கிரமிப்புக்கு மத்தியில் வாழ்வது மிகவும் துயரமானது. பாலஸ்தீனியர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அதே வேளையில் யூதர்கள் காயப்படுவதையும் நான் வேதனையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
அப்பாவி மக்களை அச்சுறுத்துவதன் மூலம், காயப்படுத்துவதன் மூலம் சுதந்திர பாலஸ்தீனத்தை நிச்சயம் அடைய முடியாது. இதுமாதிரியான தாக்குதல்கள், நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் இரு தரப்பும் மோதிக்கொள்வதற்கே வித்திடும். தீர்வுக்கு பயன்படாது. அது இஸ்ரேலியர்களோ அல்லது பாலஸ்தீனியர்களோ.. அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பது என்பது இஸ்ரேலுக்கு எதிரானது, யூதர்களுக்கு எதிரானது என்று அர்த்தம் கிடையாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்கள் இஸ்ரேலியர்களோ அல்லது பாலஸ்தீனியர்களோ அவர்களுக்கு எனது அன்பையும், ஆதரவையும் அனுப்புகிறேன். அவர்களுக்கு பலம் கிடைக்கட்டும். ஒவ்வொரு மனித உரியிருக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு. பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அவர்கள் எந்த தேசத்தவராக இருந்தாலும் சரி, அவர்களது மதம், மொழி, இனம் எதுவாக இருந்தாலும் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ உரிமை உண்டு என்று கூறியுள்ளார் ஜிஜி ஹாடிட்.
ஜிஜி ஹாடிட்டின் இந்த போஸ்ட்டுக்கு இஸ்ரேல் அரசின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் உங்களது மெளனம் புரிகிறது. இத்தனை காலமாக நீங்கள் தூங்கிக் கொண்டா இருந்தீர்கள். யூத குழந்தைகள் வீடுகளில்வைத்தே வெட்டிக் கொல்லப்பட்டது மட்டும் உங்களது கண்களுக்குத் தெரியவில்லையா.. உங்களது மெளனம் நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.. நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று அதில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஜிஜி ஹாடிடின் பூர்வீகம் பாலஸ்தீனம்தான். நீண்ட காலமாக சுதந்திர பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுத்து வருகிறார் ஜிஜி ஹாடிட். அவரது சகோதரி பெல்லா ஹாடிட்டும் பாலஸ்தீன சுதந்திரத்திற்காக குரல் கொடுத்து வருபவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}