வாஷிங்டன்: சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு மிக மோசமாக அமெரிக்கா நடத்தியுள்ளது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை தலைவரே வெளியிட்டுள்ளார். அத்தோடு இந்தியர்களை Illegal Aliens என்றும் கேவலமாக சித்தரித்துள்ளார்.
இந்தியர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டவரையும் கூட அந்த அதிகாரி இப்படித்தான் விஷமத்தனமாக விமர்சித்துள்ளார். யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியே துரத்துவோம் என்றும் அவர் கொக்கரித்துள்ளது இந்தியர்களைக் கொதிக்க வைத்துள்ளது.
டிரம்ப் அதிபராக வந்தது முதல் பல்வேறு அதிரடிகளில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டவரை தற்போது வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்தியர்களும் கூட இதில் சிக்கிக் கொண்டுள்ளனர். முதல் கட்டமாக 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலமாக இந்தியாவுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். அவர்களை கை, கால்களை விலங்கிட்டு அழைத்து வந்ததாக வெளியான வீடியோ காட்சிகள் அதிர வைத்தன. அவை உண்மையா என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இருப்பினும் மத்திய அரசு இதுகுறித்து இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பின்னணி இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான். குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள் என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.
அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ள இந்த வீடியோவின் மூலமாக, நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது தெளிவாகியுள்ளது. இது இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு
விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!
சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்
Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!
ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து
அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா
அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?
{{comments.comment}}