ஏவுகணை வீசி 7 இஸ்ரேலியர்களைக் கொன்ற கையோடு.. போரை நிறுத்துவதாக அறிவித்தது ஈரான்!

Jun 24, 2025,12:02 PM IST

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளது ஈரான். அதேசமயம், போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன்பாக அது ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது. அதில் இஸ்ரேலில் 7 பேர் உயிரிழந்தனர்.


மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரான் திங்கள்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் டிரம்ப்பிடமிருந்து ஒரு திடீர் அறிவிப்பு வெளியானது.


அதன்படி, இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக TruthSocial-ல் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டார் டிரம்ப்.  மத்திய கிழக்கு அழியாது, கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பாராக என்றும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், ஈரான் வெளியுறவு அப்பாஸ் அராக்சி இதை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.




எந்த போர் நிறுத்த உடன்பாடும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். அவர் மேலும் கூறுகையில், காலை 4 மணி வரை டெஹ்ரான் பதிலடி கொடுத்தது என்று கூறி, தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தினார். முன்னதாக டிரம்ப் போட்டிருந்த பதிவில், இஸ்ரேலும் ஈரானும் என்னிடம் ஒரே நேரத்தில் வந்து, சமாதானம் என்றனர். இதுதான் சரியான நேரம் என்று எனக்குத் தெரியும். உலகமும், மத்திய கிழக்கும் உண்மையான வெற்றியாளர்கள்.  இரண்டு நாடுகளும் அன்பு, அமைதி மற்றும் வளமான எதிர்காலத்தைக் காணும். அவர்கள் நேர்மை மற்றும் உண்மையிலிருந்து விலகிச் சென்றால் இழப்பதற்கு நிறைய இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஈரானின் எதிர்காலம் வரம்பற்றது, மேலும் பெரிய வாக்குறுதிகள் நிறைந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று அவர் கூறினார். 


டிரம்ப் கெஞ்சினார் - ஈரான் தகவல்


இதை மறுத்துப் பேசிய அப்பாஸ், போரை ஆரம்பித்தது இஸ்ரேல்தான். நாங்கள்தான் முடிக்க வேண்டும் என்றும் ஈரான் கூறியுள்ளது. தற்போது வரை எந்த போர் நிறுத்த உடன்பாடும் இல்லை. இஸ்ரேல் சட்டவிரோத தாக்குதலை நிறுத்தினால், ஈரான் பதிலடி கொடுக்காது என்றும் அப்பாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக ஈரானும் அறிவித்துள்ளது. அதற்கு முன்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஈரான். அதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு போரை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்களிடம் போரை நிறுத்துமாறு கெஞ்சியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா மிகவும்  இறங்கிப் போய் போர் நிறுத்தத்திற்கு முயன்றுள்ளதாக கருதப்படுகிறது.


ஈரான் நினைத்ததை விட வீரியமாக இருப்பதையும், ஈரானுக்கு ஆதரவாக உலக நாடுகள் அணி திரள்வதையும் பார்த்த பிறகே அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு தீவிரமாக முயன்றதாக கருதப்படுகிறது.   மேலும் அதிபர் டிரம்ப் சமீப காலமாக உலக நாடுகளின் விவகாரங்களில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார். இப்படித்தான் இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போதும் கூட அவராகவே வந்து போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி வைத்தேன் என்றார். இப்போது ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப்பே அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்