வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார். தேவையில்லாமல் பலரை கொன்று குவிக்கிறார் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விளாடிமிர் புடினை இப்படி கடுமையாக விமர்சித்துள்ளார் டிரம்ப்.
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், புடின் தேவையற்ற விதமாக எண்ணற்ற உயிர்களை பலி வாங்குகிறார். ஏவுகணைகளும், ஆளில்லா விமானங்களும் எந்தவித காரணமுமின்றி உக்ரைன் நகரங்களின் மீது ஏவப்படுகின்றன என்று சாடியுள்ளார் டிரம்ப்.
சமீப காலமாக புடினுடன் நல்லுறவு நிலுவதாக கூறி வந்தார் டிரம்ப். மேலும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியிடமும் அவர் கடுமையாக நடந்து கொண்டார். அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி வந்தபோது கூட அவரிடம் தனது கடுமையைக் காட்டியிருந்தார் டிரம்ப். ஆனால் தற்போது புடினை விமர்சித்துப் பேச ஆரம்பித்துள்ளார் டிரம்ப்.
அண்மைக் காலமாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் தனது அதிருப்தியை டிரம்ப் வெளிப்படுத்தி வருகிறார். உக்ரைனை முழுமையாகக் கைப்பற்ற புடின் முனைந்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்கா ரஷ்யா மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தான் உதவுவதாகவும், இந்தப் போர் "ஒழுங்கீனமான திறமையின்மை மற்றும் வெறுப்பினால்" ஏற்பட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். அதேவேளையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பேச்சுக்களையும் அவர் விமர்சித்துள்ளார். ஜெலன்ஸ்கியின் சில கருத்துக்கள் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
சமீப நாட்களாக ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, உக்ரைனில் நடந்த மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியது. இதில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
பிக் பாஸ் தமிழ் .. சீசன் 9.. அக்டோபர் 5ம் தேதி முதல்.. வீடுகள் தோறும் இனி கலகலதான்!
SIR திட்டத்தையே மொத்தமாக ரத்து செய்ய நேரிடும்.. சுப்ரீம் கோர்ட் திடீர் எச்சரிக்கை
வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. தேதி நீட்டிப்பு கிடையாது.. ஐடி துறை அறிவிப்பு
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
உயிரின் சிரிப்பு
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
{{comments.comment}}