வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விமானத்தில் ஏறும்போது படியில் தட்டுத் தடுமாறி விழப் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுன் விமான நிலையத்திலிருந்து தனது அதிகாரப்பூர்வ ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்காக வந்திருந்தார். அங்கிருந்து கேம்ப் டேவிட் போவதாக திட்டம். விமானத்தில் பயணிப்பதற்காக படியில் ஏறிக் கொண்டிருந்தபோது திடீரென அவர் தடுமாறி விழப் போனார். ஆனால் சுதாரித்து சட்டென விழாமல் தவிர்த்து விட்டார் டிரம்ப்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. டிரம்ப் அதிருப்தியாளர்கள் இதை வைத்து கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர். முன்னாள் அதிபர் ஜோ பிடனும் இதுபோல த்தான் தடுமாறியபோது கேலி கிண்டலுக்குள்ளானார்கள். அதேபோல டிரம்ப்பை அவரது எதிர்த் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இதுவே பிடனாக இருந்திருந்தால் நாள் முழுக்க டிவியில் இதையே காட்டுக் கொண்டு இருந்திருப்பார்கள் என்று பலரும் கிண்டலாக கூறியுள்ளனர்.
டிரம்ப் மட்டுமல்ல, வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் கூட படியில் தடுமாறிய சம்பவமும் அன்று நடந்தது.
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
தேடல்!
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!
{{comments.comment}}