அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்றால் 20.. கமலா ஹாரிஸ் ஜெயித்தால் 17.. சாதிக்கப் போவது யாரு?

Jul 22, 2024,05:53 PM IST

வாஷிங்டன்:   டொனால்ட் டிரம்ப் ஜெயித்தால் அது குடியரசுக் கட்சிக்கு ஒரு புதிய சாதனை படைக்க வழி வகுக்கும். அதேபோல கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், அது ஜனநாயகக் கட்சிக்கு புதிய எழுச்சியாக இருக்கும்.


அமெரிக்க அதிபர் தேர்தல் களை கட்ட ஆரம்பித்துள்ளது. அதிபர் ஜோ பிடனின் தடுமாற்றத்தால் டிரம்ப் எளிதாக வெல்லக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகிக் கொண்டு வந்த நிலையில் அதற்கு செக் வைத்துள்ளது ஜனநாயகக் கட்சி.  ஜோ பிடனிடம் மூத்த தலைவர்கள் பலரும் பேசி போட்டியிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டனர். அதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.




தற்போது அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பிடன் வெளியேறி விட்டார். அவருக்குப் பதில் வலுவான, டஃப்பான கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகிறார். இது பெரும் திருப்பமாக கருதப்படுகிறது. கமலா ஹாரிஸ் பெயரை ஜோ பிடனே பரிந்துரைத்துள்ளார். மேலும் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது.


கமலா ஹாரிஸை எளிதாக வீழ்த்துவேன் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால் அனைவரும் இணைந்து டிரம்ப்பை தோற்கடிப்போம் என்று கமலா ஹாரிஸ் அதிரடியாக  கூறியுள்ளார். இதனால் போட்டி இப்போதே கடுமையாகியிருக்கிறது.


46 அதிபர்கள்




அமெரிக்காவைப் பொறுத்தவரை இதுவரை 46 அதிபர்களை அது கண்டுள்ளது. முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன். அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். கட்சி சார்பாக அதிபரான முதல் தலைவர் ஜான் ஆடம்ஸ்தான். அவர் பெடரல் கட்சியைச் சேர்ந்தவர். இந்தக் கட்சி சார்பில் அதிபரான ஒரே தலைவர் இவர் மட்டுமே. அதன் பின்னர் விக் என்ற கட்சியைச் சேர்ந்த 4 பேர் அதிபர்களாகியுள்ளனர். அதில் வில்லியம் ஹென்றி ஹாரிசன் ஒரே ஒரு மாதம் மட்டுமே அதிபராக இருந்துள்ளார்.


அமெரிக்க அதிபர் பதவிகளில் 1853ம் ஆண்டு முதல் இரு கட்சிகளின் ஆதிக்கம் வந்து விட்டது. அதாவது குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள்தான் தொடர்ந்து மாறி மாறி வென்று வருகின்றனர். அந்த வகையில் இரு கட்சிகளிலிருந்தும் இதுவரை தலா 19 பேர் அதிபர்களாகியுள்ளனர்.


ஆபிரகாம் லிங்கன் டூ ஜோ பிடன் வரை




குடியரசுக் கட்சி சார்பில் முதல் முறையாக அதிபரான பெருமை ஆபிரகாம் லிங்கனுக்கு உண்டு. அதேபோல ஜனநாயகக் கட்சி  சார்பில்  அதிபரான முதல் தலைவர் ஆண்ட்ரு ஜாக்சன் ஆவார்.  இதுவரை 16 பேர் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர்களாகியுள்ளனர். அமெரிக்க வரலாற்றில் அதிக அதிபர்களைக் கொடுத்த கட்சியாக குடியரசுக் கட்சி திகழ்கிறது. அந்தக் கட்சியிலிருந்து அதிபரான பலரும் உலகப் புகழ் பெற்ற தலைவர்களாகவும் இருந்துள்ளனர். ஆபிரகாம் லிங்கன், நிக்சன், போர்டு, ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ், அவரது மகன் ஜூனியர் ஜார்ஜ் புஷ் என்று அந்த லிஸ்ட் மிகப் பெரியது. 


ஜனநாயகக் கட்சியும் ஜான் எப் கென்னடி, ஜிம்மி கார்ட்டர், பராக் ஒபாமா என புகழ் பெற்ற தலைவர்களைக் கொடுத்துள்ளது. இந்த சாதனையாளர்கள் பட்டியலில் கமலா ஹாரிஸ் சேருவாரா அல்லது டிரம்ப் 20வது அதிபராகி குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்