வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே போர் ஏற்பட்டது. இந்த போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இந்த சந்திப்பு நடந்தப்பட்டது.
இந்த சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இருதலைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என்பது போல் பேசிக்கொண்டே இருந்தனர். இதற்கு ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யா செய்வதை நீங்கள் தடுக்கவே இல்லை. 2019ம் ஆண்டில் இருந்து ரஷ்யா போர் செய்து வருகிறது என்று கூறினார்.
இதற்கு டிரம்ப் கூறும் போது, நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். இதில் இருந்து நீங்கள் வெற்றி பெறபோவது இல்லை. நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது நாட்டிற்கே அவ மரியாதையானது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிடுகின்றனர். உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. 2 வாரத்தில் முடிந்திருக்க வேண்டிய போர் இது. நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதை செய்கிறீர்கள். நீங்கள் இவ்வாறு நடத்து கொண்டால் அமைதி ஒப்பந்தத்தை கடினமாக்கும் என்று நான் பயப்படுகின்றேன். உயிர்கள் இழக்காமல் இருக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் கூறுகின்றேன். நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}