US Presidential Election 2024: வெல்லப் போவது டிரம்ப்பா.. கமலா ஹாரிஸா?.. விறுவிறு தேர்தலில் அமெரிக்கா

Nov 05, 2024,05:42 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு சூடு பிடித்துள்ளது. நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் தொடங்கிய தேர்தல் தற்போது படிப்படியாக பல்வேறு மாநிலங்களிலும் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது.


அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு நேர பிராந்தியங்கள் இருப்பதால் பகுதி பகுதியாக வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. முதல் வாக்குப் பதிவு நியூ ஹாம்ப்ஷயரில் தொடங்கியது. தற்போது நியூயார்க், கலிபோர்னியா, வர்ஜீனியா, கனக்டிகட், நியூ ஜெர்ஜி ஆகிய மாகாணங்களிலும் தொடங்கியுள்ளது. அடுத்து கென்டகி, இன்டியானா மாகாணங்களில் வாக்குப் பதிவு விரைவில் தொடங்கப் போகிறது. 


முன்னதாக நியூஹாம்ப்ஷயர் மாகாணத்தின் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மொத்தமே 6 வாக்குகள் உள்ள நிலையில் அங்கு டிரம்ப்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் சமமான முறையில் வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அங்கு வாக்குப் பதிவு முடிவடைந்து வாக்குகளும் எண்ணப்பட்டு விட்டன. டிரம்ப்பும், கமலாவும் தலா 3 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.




அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடந்ததுமே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விடும். கடந்த தேர்தலில்தான் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் வெள்ளை மாளிகையில், டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர். இந்த முறையும் பதட்டம் நீடித்து வருவதால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை டிரம்ப்புக்கும், கமலாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 


முன்னதாக தனது 107 நாள் தேர்தல் பிரச்சாரத்தை பென்சில்வேனியாவில் வைத்து கமலாஹாரிஸ் நிறைவு செய்தார். டிரம்ப், மிச்சிகனில் தனது பிரச்சாரத்தை முடித்தார். இதே இடத்தில்தான் தனது 3 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தனது கடைசி கட்ட பிரச்சாரத்தின்போது, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன் ஆகிய பகுதிகளில் ஓட்டு  வேட்டையாடினார் டிரம்ப். தனது சொந்த ஊரான புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம்பீச் பகுதியில்தான் டிரம்ப்புக்கு வாக்கு உள்ளது. அங்கு சென்று தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்.


மொத்தம் 50 மாகாணங்களைக் கொண்ட அமெரிக்காவில் தொடங்கியுள்ள அதிபர் தேர்தலில்  கிட்டத்தட்ட ஏழரை கோடி பேர் ஏற்கனவே தபால் வாக்குகள் உள்ளிட்ட வடிவங்களில் வாக்களித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்