வாஷிங்டன்: இன்டர்நெட்டின் அதிபயங்கர ஜோதிடர் என்று வர்ணிக்கப்படும் 40 வயதான அமி டிரிப், அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவர்தான் என்று புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். ஜோ பிடன் மீண்டும் போட்டியிட மாட்டார், விலகி விடுவார் என்று இவர் கணித்தது பலித்து விட்டதால், அடுத்த அதிபர் என்று இவர் கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமி டிராப் இன்டர்நெட்டில் பிரபலமாக உள்ளவர். பல்வேறு கணிப்புகளையும், ஆரூடங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவரது கணிப்புகளில் லேட்டஸ்ட்தான் பிடன் விலகுவார் என்பது. அது பலித்து விட்டதால் இப்போது இவர் பிரபலமாகி விட்டார். அவர் யாரை கை காட்டியுள்ளார் தெரியுமா.. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பைத்தான் அடுத்த அதிபர் என்று சொல்கிறார் அமி டிரிப்.
நட்சத்திரங்களின் சேர்க்கைகளை வைத்துப் பார்க்கும்போது டிரம்ப்தான் அடுத்த அதிபராக வருவார் என்று அமி டிரிப் கூறுகிறார். இதுவரை இல்லாத அளவிலான உச்சத்தில் டிரம்ப் இருக்கிறார். அவரது அரசியல் பயணத்தில் இப்போதுதான் அவர் புதிய உச்சத்தைப் பெறப் போகிறார். மிகப் பெரிய வெற்றியை அவர் அடைவார். அவர் மீதான கொலை முயற்சி சம்பவம் இதைத்தான் காட்டுகிறது. அவர் மிகப் பெரிய இலக்குடன் களம் இறங்கியுள்ளார். வெல்வார் என்று கூறியுள்ளார் அமி டிரிப்.

பிடன் விலகுவார் என்று கூறிய அமி டிரிப், கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்பதையும் முன்கூட்டியே கூறியிருந்தார். அதுவும் நடந்துள்ளது. ஆனால் கமலா ஹாரிஸுக்கு அதிர்ஷ்டம் கிடையாது என்றும் கணித்துள்ளார் அமி.
இதுதவிர மேலும் சில கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார் அமி டிரிப். ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா கடும் நெருக்கடியை சந்திக்கும். அது அரசியல் நெருக்கடியாக இருக்கக் கூடும் என்று அவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 19ம் தேதிதான் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.
ஆனால் இதை பொருட்படுத்தாமல் கமலா ஹாரிஸ் அதிரடியாக தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார். தனது செல்வாக்கை உயர்த்தும் வேலைகளிலும் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை
கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?
தமிழகப் பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு: 2 நாட்களுக்கு Citizen Portal இணையதளம் செயல்படாது!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}