சென்னை: வாக்காளர்களே, உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையா, நீங்கள் கவலைப்பட தேவையில்லை. வேறு சில ஆவணங்களையும் காட்டி நீங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு வகையான ஆவணங்களை பட்டியலிட்டு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இது தவிர கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளையே நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன நாளை வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
வாக்குப்பதிவு அன்று வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையை தங்களுடன் எடுத்து வர வேண்டியது அவசியம். அதேசமயம், வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக பல்வேறு வகையான ஆவணங்களை பரிந்துரைக்கிறது தேர்தல் ஆணையம். அதில் ஒன்றைப் பயன்படுத்தி நீங்கள் வாக்களிக்கலாம். அதேபோல பூத் ஸ்லிப்பும் கூட கட்டாயம் கிடையாது.
வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி நீங்கள் தாராளமாக வாக்களிக்க முடியும்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அந்த ஆவணங்களின் பட்டியல்:

ஆதார் கார்டு
பான் கார்டு
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை
அரசின் சேவைகளைப் பெறுவதற்கான அடையாள அட்டை
போட்டோவுடன் கூடிய வங்கி மற்றும் தபால் அலுவலக பாஸ்புக்
ஸ்மார்ட் கார்டு
ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட் கார்டு
ஓட்டுனர் உரிமம்
பாஸ்போர்ட்
என்பிஆர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
ஓய்வூதிய ஆவணம்
எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி ஆகியோருக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் அடையாள அட்டை
எனவே வாக்காளர் அடையாள அட்டை இல்லை, பூத் ஸ்லிப் இல்லை என்று குழம்பவோ, தயங்கவோ தேவையில்லை. மேற்கண்ட ஆவணங்கள் ஏதாவது ஒன்றைக் காட்டி நீங்கள் உங்களது வாக்கை தாராளமாக பதிவு செய்ய முடியும். வாக்களிக்க வேண்டியது நமது ஜனநாயக கடமை.. வாக்குரிமை நமக்கு அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை. இதை தவறாமல் பயன்படுத்துங்கள். உங்களது வாக்குகளை உங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு செலுத்தி உங்களது கடமையை நிறைவேற்றுங்கள்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}