கனிமொழி கருணாநிதியை.. இதை விட சிறப்பாக அடையாளப்படுத்த முடியாது.. அசத்திய வர்ஷா!

Jan 29, 2023,11:27 AM IST
சென்னை: தான் வரைந்த கோலத்தை அகில உலகுக்கும் கொண்டு சென்று பெருமை சேர்த்த திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதியை வியப்பில் விழிகள் விரிய வைத்து, வாய் நிறைய புன்னகையையும், மனசு நிறைய  மகிழ்ச்சியையும் கொடுத்து அசத்தியுள்ளார் டிசைனர் வர்ஷா (@dabaraset).



கனிமொழி கருணாநிதியின் உருவத்தை, அவரது சிறப்புகளை வைத்தே வரைந்து அசத்தலாக பிரேம் போட்டு கனிமொழியிடம் கொடுத்து வாழ்த்தும் பெற்றுள்ளார் வர்ஷா

சென்னையைச் சேர்ந்தா வர்ஷா ஒரு டிசைனர். உயிர்மெய் என்பது இவரது நிறுவனத்தின் பெயர். எழுத்துக்களை வைத்து வித்தியாசமாக டிசைன் செய்வது இவரது தனிச் சிறப்பு. இவர் சமீபத்தில் தமிழ்நாடு என்ற வார்த்தையை வைத்து ஒரு அழகான கோலம் தீட்டியிருந்தார்.

இந்தக் கோலத்தைக் கொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கருணாநிதி. மேலும், எங்களுக்காக இந்த வாழ்த்து கோலத்தை வடிவமைத்து தந்த வர்ஷா (@dabaraset) அவர்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்தார்.



இந்த நிலையில் தற்போது கனிமொழி உருவத்தையே சிறப்பாக வரைந்து அவரிடம் கொடுத்து அவரை மகிழ்வித்துள்ளார் வர்ஷா. கனிமொழியின் டிரேட் மார்க் புன்னகையுடன்  கூடியதாக இந்த படம் அமைந்துள்ளது. அதில் ஆங்காங்கே கனிமொழியின் சிறப்புகளையே டிசைனாக புகுத்தியுள்ளார். தலையில் தனித்துவம், இலக்கியம், பகுத்தறிவு ஆகியவற்றைப் பொறித்துள்ளார்.  கண் இமையில் அடையாளம், கண்களில் சேவை இடம் பெற்றுள்ளது.  காதில் கலை இடம் பிடித்துள்ளது. இதழில் கனிவும், சிரிப்பும் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது.  வெற்றி கண்ட போராளி, தலைமை, தமிழ்நாட்டின்  குரல் என்பதும் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது.

வித்தியாசமான முறையில் அமைந்துள்ள இந்த வரைபடத்தை கனிமொழியை நேரில் சந்தித்துக் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் வர்ஷா.  இதுகுறித்து வர்ஷா கூறுகையில், எம்.பி. கனிமொழி அவர்களை நேரில் சந்தித்தேன். அவரது மொழிப் புலமையும், உலகளாவிய பார்வையும் அனைவருக்கும் ஒரு உந்து சக்தியாகும். எனது கலை மூலமாக  எனது பிரியத்தை அவரிடம் பகிர்ந்தேன். மறக்கமுடியாத அருமையான அனுபவம் என்று சிலாகித்துள்ளார். இப்போது இந்தப் படமும் வைரலாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்