பெங்களூரு: உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த 37 வயதுப் பெண் பெங்களூர் ஹோட்டலில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா. 37 வயதான இவர் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்திருந்தார். பெங்களூர் வந்திருந்த இவர் சேஷாத்ரிபுரத்தில் உள்ள ஜெகதீஷ் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் இவர் அறையை விட்டு வராமல் இருந்துள்ளார். இதனால் மாலை 4. 30 மணியளவில் ஒரு ஹோட்டல் ஊழியர் போய் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே கதவு பூட்டியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாற்றுக் கீ போட்டுத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜரீனா பிணமாகக் கிடந்தார். இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூழலைப் பார்க்கும்போது இது கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பவுரிங் மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவில்தான் மரணம் எப்படி சம்பவித்தது என்று தெரிய வரும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}