இரு விழிகள்!

Mar 21, 2026,03:27 PM IST

- வே.ஜெயந்தி


மௌனத்தில் பேசிய

வார்த்தைகள் விழிகளில்,

மனதில் மறைந்திருக்கும்

எண்ணங்களின் பிரதிபலிப்பு அவை.


சொல்ல முடியாத சோகமும்

சொல்லத் தயங்கும் மகிழ்ச்சியும்,

ஒரே நேரத்தில் பதியும்

அந்த இரு சிறு உலகங்கள்.




மீன்கள் நீந்தும் நீர்போல்

மிதக்கும் கண்ணீர் துளிகள்,

மனத்தின் ஆழத்தை

மெதுவாக வெளிப்படுத்துகின்றன.


அன்பும் கணிவும் நிரம்பி

அருகில் நிற்கும் போது,

ஆறுதலாய் மாறும்

அந்த இரு விழிகள்.


கோபம் வந்தாலும் கூட

கனிவை மறக்காதவை,

உண்மையை மறைக்காமல்

உள்ளத்தை வெளிப்படுத்தும்.

மனிதன் சொல்வதைக் காட்டிலும்

விழிகள் சொல்வது உண்மை.


இதயம் பேசும் மொழி அது 

பாசத்தின் நிலையான சாட்சி.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்