பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

Dec 25, 2025,05:18 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.


மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்துவும் தனது பாணியில் கவிதாஞ்சலி செய்துள்ளார்.


இதுதொடர்பாக வைரமுத்து எழுதிய கவிதை:




பேரன்பு பேராற்றல்

இரண்டின் கூட்டுவடிவம்

வாஜ்பாய்


கொள்கையில் தலைவன்

குணத்தில் குழந்தை


அவர் 

பிரதமராக இருந்தபொழுது

இந்தியிலிருந்து

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட

அவரது கவிதை நூலை

பிரதமர் இல்லத்தில் 

வெளியிட்டுப் பேசினேன்


“நீங்கள் விரும்பினால்

என்றேனும் ஒருநாள்

முன்னாள் பிரதமர் ஆகலாம்;

ஆனால், நீங்கள் என்ன முயன்றாலும்

முன்னாள் கவிஞர் ஆகமுடியாது” 

என்றேன்


“என்னைச் சிகரத்தில் ஏற்றாதீர்கள்

அங்கே எனக்கு

இருக்கையிட இடமிருக்காது”

என்ற அவரது கவிதையை

மேற்கோள் காட்டினேன்


பின்னொரு சந்திப்பில்

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட

என் கவிதைகளை

அவர் வாய்விட்டுப் படித்து

வாய்விட்டுச் சிரித்தார்


என் தலைக்கு மேல்

தங்க நாணயங்கள்

சிதறிய தருணம் அது


இன்று

நூற்றாண்டு காணும் நாயகரே!


பல நூற்றாண்டுகள்

நினைக்கப்படுவீர்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்

news

இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்