அந்த நிலாவத்தான்.. நாம கையில புடிச்சோம்.. வைரமுத்து செம குஷி .. வாழ்த்து!

Aug 23, 2023,07:04 PM IST

சென்னை:  கவிப்பேரரசு வைரமுத்து, சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியையும், விக்ரம் லேண்டர் அற்புதமாக நிலவில் தரையிறங்கியதையும் வரவேற்று ஒரு அழகிய கவிதையை வடித்துள்ளார்.




இதுதொடர்பாக வைரமுத்து எழுதியுள்ள கவிதை:


பூமிக்கும் நிலவுக்கும்

விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது

இந்தியா


ரஷ்யா அமெரிக்கா சீனா 

என்ற வரிசையில்

இனி இந்தியாவை எழுதாமல்

கடக்க முடியாது


இஸ்ரோ விஞ்ஞானிகளின்

கைகளைத் தொட்டுக்

கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்


இது மானுட வெற்றி


அந்த நிலாவத்தான்

நாம கையில புடிச்சோம்

இந்த லோகத்துக்காக 


இது போதாது

நிலா வெறும் துணைக்கோள்

நாம் வெற்றி பெற - ஒரு

விண்ணுலகமே இருக்கிறது என்று வைரமுத்து தனது கவிதையில் கூறியுள்ளார்.


நேற்றும் கூட வைரமுத்து ஒரு நிலவுக் கவிதையை படைத்திருந்தார். இதுவும் சந்திரயான் விண்கலகத்துக்காகத்தான். அதில் அவர் கூறியிருந்ததாவது:


நேரம் நெருங்க நெருங்க

மூளைக்குள் வட்டமடிக்கிறது

சந்திரயான்


நிலவில் அது

மெல்லிறக்கம் கொள்ளும்வரை

நல்லுறக்கம் கொள்ளோம்


லூனா நொறுங்கியது

ரஷ்யாவின் தோல்வியல்ல;

விஞ்ஞானத் தோல்வி


சந்திரயான் வெற்றியுறின்

அது இந்திய வெற்றியல்ல;

மானுட வெற்றி


ஹே சந்திரயான்!

நிலவில் நீ மடியேறு

நாளை நாங்கள் குடியேற என்று ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார் வைரமுத்து.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்