- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
இது மனிதனின் மாய உணர்வு .!!
இது உயிர்களின் உள்மூச்சு...!!
இது உலகின் புரியாத புதிர்..!!
இது இதயத்தின் இதமான தாலாட்டு..!!
இது அற்புதமான உணர்வுகளின் சங்கமம்...!!
இது ஒரு மாபெரும் மாய சக்தி ...!!
இது நதி போல் பாய்ந்து கடலாய் முடியும்..!!
இது அன்பைவிதைத்து அன்பைஅறுவடை செய்யும்..!!
இரண்டு இதயத்தினை இணைக்கும் இழை..!!
இதயத்தை வருடும் இதமான தென்றல்..!!
இன்பம்துன்பம் நிறைந்த இனிய பயணம்..!!
இருமனம் இணைந்து ஒருமனமாகும் நேசம்..!!

சில நேரங்களில் வசந்தகாலம், பூத்து குலுங்கும் ..!!
சில நேரங்களில் கோடைகாலம் ,வெந்து தனியும்..!!
சில நேரங்களில் மழை காலம் ,கண்ணீர் சிந்தும்..!!
சில நேரங்களில் பனிக்காலம், நடுங்க வைக்கும் .!!
உண்மை காதல் தீயவனை நல்லவனாக்கும்..!!
உண்மை காதல் காதலையே பழி கொடுக்கும்..!!
உண்மை காதல் எதிலும் உறுதுணையாய் நிற்கும்..!!
உண்மைகாதல் மரணம்வரை நேசிக்கவைக்கும்..!!
ஒருவர் உணர்வை ஒருவர் என்றும் மதித்தலும் ,
ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையும்,
விட்டுக் கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலுமே.,
காதல் வெற்றிக்கான ரகசியங்கள் ...!!!
காதலே வாழ்க..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!
மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு
'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்
தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?
கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்
{{comments.comment}}