- தேவி

உன் இதழில் பூக்கும் மொட்டாக இருக்க ஆசை
உன் மௌனத்தின் வார்த்தையாக இருக்க ஆசை
உன் உணர்வின் ஊமையாக இருக்க ஆசை
உன் இமையின் இதழாக இருக்க ஆசை
உன் இசையின் ஓசையாக இருக்க ஆசை
உன் ஆசையின் ஆணி வேராக இருக்க ஆசை
உன் பார்வையின் தென்றலாக இருக்க ஆசை
நீ படிக்கும் கவிதையாக இருக்க ஆசை
உன் எண்ணத்தின் வண்ணமாக இருக்க ஆசை
உன் மூச்சு காற்றின் எல்லையாக இருக்க ஆசை
உன் குரலின் குயிலாக இருக்க ஆசை
உன் வானில் வானவில்லாக மின்ன ஆசை
உன் விரலின் ரேகையாக இருக்க ஆசை
உன் காதலின் கடலாக இருக்க ஆசை
என் மரணத்திலும் உன் மடியில் இருக்க ஆசை......
உன் புருவங்களின் வடிவமாக இருக்க ஆசை
உன் இடை அழகின் கொடியாக இருக்க ஆசை
உன் பார்வையின் தேடலாக இருக்க ஆசை
உன் கொஞ்சலின் குழந்தையாக இருக்க ஆசை
உனது ஜாடைகளின் பாஷையாக இருக்க ஆசை
உனது முத்தத்தின் யுத்தமாக இருக்க ஆசை
உன் காதலின் மையமாக இருக்க ஆசை
உன் கால் விரலின் தடயமாக இருக்க ஆசை
உன் மூச்சு காற்றின் வெப்பமாக இருக்க ஆசை
உன் இதயத்தின் ரத்த ஓட்டமாக இருக்க ஆசை
உன் விரல் நுனியின் ஈரமாக இருக்க ஆசை
உன் கண்ண குழியின் மச்சமாக இருக்க ஆசை
உனது வேகத்தின் நாடி துடிப்பாக இருக்க ஆசை
உன் கால் கொலுசின் இடமாக இருக்க ஆசை
உன் கை வளையலின் தடயமாக இருக்க ஆசை
உனக்குள் நீ மறைத்து வைத்திருக்கும்
காதலின் மௌனமாக இருக்க ஆசை!
உன் கரும் கூந்தலின் நறுமணமாக ஆசை
உன் காதோரம் சினுங்கும் இசையாக ஆசை
எனக்காக என் உயிரை
நீ சுமக்க ஆசை
உன் விரல் பிடித்து
உன் உயிரில் கலந்து
உலகம் மறந்து
உன் அசைவில்
என் பாஷையை மறந்து
புத்துயிர் பெற்று
புதுமை அடைய ஆசை!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
பொம்மையம்மா.. பொம்மை!
நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!
{{comments.comment}}