Valentines week.. இமைகளின் பாஷைகளை.. இதழ் மணம் அறியும்.. கருங் கூந்தலின் சிரிப்பினை!

Feb 11, 2025,04:02 PM IST

- தேவி


அவளின் மெளனமான பார்வையை

மனது அறியும்

சிணுங்கி சிறகடிக்கும் கொலுஸின் ஓசையை

இதயத் துடிப்பு அறியும்

வெட்கப்பட்டு தலைகுனியும் வளையலின் இசையை

மூச்சுக்காற்று அறியும்

நொடிக்கு நூறுமுறை ஒளிந்து பார்க்கும்  இதயத்தை

என் உயிரோசை அறியும்


வானவில்லின் வண்ணங்களை தோற்கடிக்கும் அவளின் எண்ணங்களை 

பார்வையின் தீண்டல் அறியும்

இமைகளின் பாஷைகளை 

இதழ்மணம்  அறியும்

கருங் கூந்தலின் சிரிப்பினை 

கன்னக்குழியின் அழகறியும்

மேகத்தின் வருகையை 

காற்று அறியும்




விரல் நுனியின் தேடலை 

மனதின் மெளனங்கள் அறியும்

காற்றின் வேகத்தை திசை அறியும் 

திருடிய பார்வையை

இதழ் பூக்கள் அறியும்

களைந்த போன கனவை 

கண் மையின் ஓவியம்  அறியும்


உன் காதலின் மெளனத்தை 

என் மனம் அறியும்

மலரின் மணத்தை வண்டு அறியும்

பார்வையின் ஈரத்தை இதயத்தின் உணர்வறியும்

இதயத்தின் பாஷைகளை 

இதழ்தேன்  அறியும்


கற்பனையின்

நினைவு அலையை 

கனவு அறியும்

உனக்காக ஏங்கும்

மனத்தை

காலம் அறியும்


உன் வாசனையை 

என் மனம் அறியும்

உன் தேடலை 

என் தேவை அறியும்


மண்ணின் மகிமையை 

வேர் அறியும்

உன் மனத்தின் இனிமையை

என் பெண்மை அறியும்


மனத்தின் காதல் ஜாடைகளை 

பார்வை  அறியும்!


மழையின் இனிமையை 

மரம் அறியும்

உன் மனத்தின் ஊடலை 

என் மெளனம் அறியும்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்