பாஜக மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி

Nov 01, 2023,08:19 PM IST

கோயம்புத்தூர்: பாஜக மகளிர் அணித் தேசியத் தலைவர் வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பாஜக தேசிய மகளிர் அணித் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர். அகில இந்தியப் பதவியில் இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கும் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து கொண்டே இருப்பார் வானதி சீனிவாசன். இதுதவிர தனது தொகுதிப் பணிகளையும் பார்க்கிறார். இதனால் எப்போதும் பிசியாகவே இருப்பவர் வானதி சீனிவாசன். 




தற்போது ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் அவர் அடிக்கடி சென்று தேர்தல் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்


சமீபத்தில் சட்டிஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் நடந்த பாஜக பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாக்கு வேட்டையாடினார்.  அதை முடித்து  விட்டு கோவை திரும்பிய அவர் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கோவை மருத்துவ மைய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதற்கு முன்பு கோவை தெற்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது 2வது முறையாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்