சென்னை: வந்தே பாரத் விரைவு ரயிலில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் வண்டு இருந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்திய ரயில்வே துறையின் கீழ் வந்தே பாரத் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு இந்த சேவை மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குறைந்த நேரத்தில் விரைவாக பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் இந்த விரைவு ரயிலில் பயணம் செய்வதையே விரும்பி வருகின்றனர்.
இருப்பினும் அவ்வப்போது ரயில்களில் வழங்கப்படும் உணவு தரக்குறைவாக இருப்பதால் தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நெல்லையிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் வண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உணவு வழங்கிய ஊழியர்களை வரவழைத்து பயணிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டனர். முன்னதாக ரயிலில் காலையில் வழங்கிய அதே சாம்பார் சாதத்தை தான் பயணிகள் உண்டுள்ளனர். அதில் உள்ள வண்டுகளை கடுகு என நினைத்து பயணிகள் சாப்பிட்டதாக தெரிகிறது.
அதிக கட்டணத்தில் இந்த ரயிலில் பயணிகள் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இப்படிப்பட்ட தரக்குறைவான உணவு வழங்குவதை அதிகாரிகள் தடுத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தரக்குறைவான உணவை வழங்கிய காண்டிராக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}