தேனி: வணக்கம்டா மாப்ளே.. இந்தக் குரலை கேட்காத தமிழர்களே இருக்க முடியாது. அந்த வணக்கம்டா மாப்ளைக்கு ஒரு டெலிகேட் பொசிஷன் வந்திருச்சு.. இதனால் தனது மீசையை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் நம்ம மாப்ளை!
தேனியைச் சேர்ந்தவர் அருண். டிக்டாக் மூலமாக பிரபலமானவர். இவர் பேச ஆரம்பிப்பதே.. "வணக்கம்டா மாப்ளை" என்றுதான் ஆரம்பிப்பார். ஜாலியான பேச்சுக்குப் புகழ் பெற்றவர். இவருக்கு இப்போது ஒரு சிக்கலாய்ருச்சு.
சமீபத்தில் தேனி தொகுதியில் யார் ஜெயிப்பாங்க என்று பலரும் இவரிடம் கேட்டிருந்தனர். அவரும் அதற்கு, தேனியில் டிடிவி தினகரன் தான் ஜெயிப்பார்.. அவர் ஜெயிக்காட்டி நான் ஒரு பக்க மீசையை எடுத்துக்கிறேன் என்று கூறியிருந்தார். இதனால் பரபரப்பானது. பலரும் வந்து இவரை விமர்சிக்க, அவருக்கு ஆதரவாக பலர் உள்ளே வந்து குதிக்க ஒரே களேபரமானது.

இந்த நிலையில் தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் ஜெயிக்கவே மாப்ளையை விடாமல் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர் திமுகவினர். இதையடுத்து மறுபடியும் ஒரு வீடியோ போட்டுள்ளார். இந்த வீடியோவில் மீசை இல்லாமல் காட்சி தருகிறார். கூடவே அவர் பேசிய பேச்சுதான் செம வைரலாகியுள்ளது.
வணக்கம்டா மாப்ளை என்று ஆரம்பித்து தேனியில் தங்கத் தமிழ்ச்செல்வன் பெரியப்பா அய்யா ஜெயித்ததது ரொம்ப ரொம்ப சந்தோஷம்னு ஒரே போடோக போட்டு விட்டார். அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். நான் மீசையை எடுக்கறேன்னும் சொல்லியிரு்நதேன். அதுக்குள்ள காளியாத்தாவே மீசை எடுக்க வச்சுட்டா.. மறுபடியும் எடுக்கிறதுன்னானும் எடுக்கறேன்.. சித்திரவதை பண்ணாதீங்க என்று சிரித்தபடி கூறியுள்ளார்.
கூடவே, எனக்கு டிடிவி தினகரனும் வேணும், ஓபிஎஸ்ஸும் வேணும், தங்க தமிழ்ச்செல்வனும் வேணும். மூனு பேரில் யார் வந்தாலும் சந்தோஷம்தான். தேனி மக்களுக்கு நல்லது செய்வாங்க. எனக்கு வருத்தமெல்லாம் இல்லை என்று கூறி சமாளித்துள்ளார் அருண்.
என்னவோ போ மாப்ளை..!
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}