தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி நோண்பு!

Aug 25, 2023,10:20 AM IST
சென்னை : செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமியை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாள் வரலட்சுமி விரதமாகும். லட்சுமி தேவியை 16 வகை செல்வங்களை தரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படும் எட்டு ரூபங்களில் வழிபடுவது வழக்கம். இந்த அஷ்டலட்சுமிகளையும் வீட்டிற்கு அழைத்து, பூனை செய்து வழிபட்டு, நிரந்தரமாக அவர்கள் நம்முடைய வீட்டிலேயே தங்கி இருந்து, அருள் செய்யும் படி வேண்டிக் கொள்ளும் ஏற்ற நாள் வரலட்சுமி விரத நாளாகும்.

வரலட்சுமி விரதத்தை சுமங்கலி விரதம் என்றும், மகாலட்சுமி விரதம் என்றும் பல பெயர்களில் குறிப்பிடுவதுண்டு. இந்த நாளில் திருமணமான பெண்கள், தங்களின் கணவர் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கும், குடும்பம், குழந்தைகள் சுபிட்சமாக இருப்பதற்காகவும் வேண்டிக் கொண்டு, விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். திருமணமாகாத பெண்கள், நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு விரதம் இருப்பார்கள். வரலட்சுமி விரதத்தை ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.



வரலட்சுமி விரதம் பொதுவாக ஆடி மாதம் வளர்பிறையில் வரும் நவமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் ஆடி மாதத்தில் இரண்ட அமாவாசை வரும் ஆண்டுகளில் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்தில் வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆகஸ்ட்  25 ம் தேதியான இன்று அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் சுக்கிர ஹோரை நேரமாக 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பூஜை செய்து வழிபடலாம். இன்று 10.30 முதல் 12 மணி வரையிலான நேரம் ராகு காலம் என்பதால், 10.30 மணிக்கு முன்பாக பூஜையை நிறைவு செய்து விட வேண்டும்.

வரலட்சுமி விரதம் இரண்ட வகையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒன்று கலசம் அமைத்து, அதில் மகாலட்சுமியை அலங்கரித்து, எழுந்தருளச் செய்து, பூஜை செய்து வழிபடலாம். மற்றொன்று முறையில் கலசம் வைத்து வழிபடும் வழக்கம் இல்லாதவர்கள், மகாலட்சுமியில் படத்தை வைத்து நெய் தீபமேற்றி, சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல், பருப்பு பாயசம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஒற்றை இலக்க எண்ணிக்கையில் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இந்த நாளில் லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம் ஆகிய ஸ்லோகங்களை சொல்லி மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

மஞ்சள் நூல் அல்லது கயிற்றில் மத்தியில் இரண்டு பூக்களைக் கட்டி, மகாலட்சுமி முன் வைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த கயிற்றை கணவர் அல்லது வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்கள் கையால் கட்டிக் கொள்ள வேண்டும். மகாலட்சுமியின் மனம் மகிழும் பூஜை செய்து, எப்போதும் எங்களுடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்