வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மத குருவாக (போப்) தேர்வு செய்யப்பட்டார் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட். இவர் போப் பதினான்காம் லியோ என்று அழைக்கப்படுவார் என்று வாடிகன் சிட்டி தெரிவித்துள்ளது. புதிய போப்பாண்டவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் போப்பாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த மாதம் 21ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவா் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து இவரது உடல் ரோம் நகரில் 26 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதே சமயத்தில் அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின.
கத்தோலிக்க மரபுப்படி, அடுத்த போப்பை தேர்வு செய்வதற்கான கூட்டம் மே 5 ஆம் தேதியிலிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் என்று அறிக்கப்பட்டது. அதன்படி, நேற்று, புதன்கிழமையன்று புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்துக்குள் ரகசியமாக நடைபெற்றது இந்த வாக்குப்பதிவு. இந்த வாக்கெடுப்பில் 71 நாடுகளைச் சோ்ந்த 80 வயதுக்குட்பட்ட 133 கார்டினல்கள் பங்கேற்றனர். இதில், புதிய போப்பாக ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். ரகசிய வாக்கெடுப்பில் புதிய போப் தேர்வானதை அடுத்து வெண்புகை வெளியேற்றப்பட்டது.
ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் அமெரிக்காவை சேர்ந்த முதல் போப் ஆண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்தவர். பெருநாட்டில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை கவனித்து வந்தவர். இவர் போப் பதினான்காம் லியோ என்று அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?
காலியாக இருக்கும் ஜெயலலிதாவின் இடம்.. நிரப்புவதற்கு ஏற்ற சரியான பெண் தலைவர் யார்?
மனக்காயங்களும் துன்பங்களும் (Hurt & Suffering)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
{{comments.comment}}