சென்னை:முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு கிழக்குத் தகுதி தொகுதியின் எம்எல்ஏவாக வி.சி சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது.மொத்தம் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் பிரதான கட்சிகளான திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 12 ஆயிரம் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார். அதேபோல் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,138 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். என்னதான் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 45 பேரும் அத்தொகுதியில் டெபாசிட்டை இழந்தனர்.

சீதாலட்சுமி விட திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,377 வாக்குகள் அதிகம் பெற்று ஆட்சியை தக்க வைத்தார். அதேபோல் தமிழக தேர்தல் வரலாற்றிலேயே ஈரோடு இடைத்தேர்தலில் நோட்டா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் அபார வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஆனார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல் மு க ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து முதல் மு க ஸ்டாலின் அமைச்சர் சந்திரகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கடந்த 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கி தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}