பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்

Dec 29, 2025,06:05 PM IST

சென்னை: ராகுல் காந்தி பெரியார் வழியில் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் RSS வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூநர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:


காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று சொல்லி அதை செயல்படுத்தத் துடிக்கும் பாஜக தான், ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் எதிரியாக இருக்க முடியும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, 'காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலை, காங்கிரசை அழிக்க முயலும் உ.பி.யின் புல்டோசர் மாடலோடு' ஒப்பிடுகிறார்.


60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, தமிழ்நாட்டின் கடனை உ.பி.யுடன் ஒப்பிடுகிறார்.




தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, அதிகாரங்களை குறைத்து, சட்டமன்றத்தை அவமதிக்கும் ஒன்றிய அரசை நோக்கித்தான், காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, நெருப்பாற்றில் நீந்தி நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்.


'காங்கிரசுடன் எந்தக் கட்சியும் அணி சேர்ந்து விடக்கூடாது' என்பதுவே பாஜகவின் எண்ணம். அதை முறியடிப்பது தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாக இருக்க முடியும். ஆனால், சில காங்கிரஸ்காரர்களோ, இங்குள்ள வலிமையான கூட்டணியை சிதைக்கத் துடிக்கின்றனர்.


'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. ஒரு நூற்றாண்டே ஆனாலும், காங்கிரசுக்குள் அந்தச் சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது.


ராகுல் காந்தி பெரியார் வழியில் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் RSS வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல் என்று அவர் கூறியுள்ளார்.


சர்ச்சையைக் கிளப்பிய பிரவீன் சக்கரவர்த்தி




ஆளுநர் ஷாநவாஸ் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் பிரமுகரின் பெயர் பிரவீன் சக்கரவர்த்தி. பிரவீன் சக்கரவர்த்தி அரசியல் பொருளாதார நிபுணராக வலம் வருபவர். காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இவர் பணியாற்றியுள்ளார்.


பிரவீன் சக்கரவர்த்தி தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தரவுப் பிரிவின் (Data Analytics Department) தலைவராக உள்ளார். ராகுல் காந்தியின் நெருக்கமான ஆலோசகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், கட்சியின் தேர்தல் உத்திகள் மற்றும் தரவு மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.


சென்னை ஐ.ஐ.டி-யில் (IIT Madras) தனது பட்டப்படிப்பை முடித்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பிசினஸ் ஸ்கூலில் (Wharton School) எம்பிஏ (MBA) பட்டம் பெற்றார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவர் நிதித்துறையில் (Finance) சர்வதேச அளவில் பெரும் அனுபவம் பெற்றவர். பிஎன்பி பாரிபாஸ் (BNP Paribas) போன்ற பெரிய முதலீட்டு வங்கிகளில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். மும்பை பங்குச் சந்தையில் (BSE) முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.


பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை குறித்து ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். இந்தியாவில் அரசியல் கட்சிகள் தரவுகளை (Data) அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதில் இவர் முன்னோடியாக இருக்கிறார்.


தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தமிழ்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களைத் தேசிய அளவில் பிரதிபலிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கூட்டாட்சித் தத்துவம் (Federalism) மற்றும் நிதிப் பகிர்வு தொடர்பான விவாதங்களில் இவரது கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சமீப காலமாக தவெகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் திமுக தரப்பில் இவரது நகர்வுகள் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்

news

திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

news

Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை

news

நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்