சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளராக இருந்த ஆதார் அர்ஜுனா அண்மையில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் துணை அல்லது இணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான நடிகர் விஜய் தற்போது இறுதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன், அரசியல் களத்தில் பேசு பொருளாகி வருகிறது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவு பெற உள்ள நிலையில் அக்கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அக்கட்சி நிர்வாகிகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதே சமயத்தில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சிலைகளையும் தவெக தலைவர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதி திறந்து வைக்க இருக்கிறார்.
மறுபக்கம் தமிழக சட்டப்பேரவை தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார் தவெக தலைவர் விஜய்.
முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியான அறையில் ஆலோசனை நடத்தி,கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை நம்பித்தான் தவெகவை தொடங்கியுள்ளதாகவும், கட்சி வளா்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டபடியே இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என கட்சி அமைப்பு பிரிக்கப்பட்டு முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டனர். அதன்பின்னர் 2ம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியலை நேற்று வெளியானது.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா தற்போது தவெக பக்கம் வந்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜயின் வீட்டில் ஆதவ் அர்ஜுனா நேற்று விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றதாகவும் இவர் தமிழக கட்சி கழகத்தில் இணைய இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகாவில் துணை அல்லது இணை செயலாளார் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தவெக தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி தொடர்ந்து இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}