சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறியது நகைச்சுவையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியாது என்பது அமித்ஷாவுக்கே தெரியும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திலே வரும் என்ற எண்ணத்தில் அமித்ஷா கூறி இருப்பார். தமிழகத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவருக்கே தெரியும். இன்னும் எதிர்கட்சிகள் தமிழகத்தில் உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
அதிமுகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பாஜகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிய கட்சி தொடங்கியிருக்கிற நடிகர் விஜய்யும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை. அண்மையில் நடந்த தவெக முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய போது, அதிமுக, பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. தவெக தான் இரண்டாவது பெரிய கட்சி என்று கூறியுள்ளார். எனவே பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையே தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை வட இந்தியாவோடு பார்ப்பதில்லை. அதுவும் கிட்டத்தட்ட தென்னிந்தியாவோடு தான் இருக்கிறது. தாய்மொழி உணர்வு இப்போதுதான் தமிழகத்தை தாண்டி பலருக்கு உருவாகி வருகிறது. இந்தி திணைப்பை அவர்கள் இதுவரை ஒரு எதிரான நடவடிக்கையாகவே பார்க்காமல் இருந்துவிட்டனர்.
அதனால், வட இந்தியாவில் மக்கள் பேசிய பல மொழிகள் அழிந்து போய் இருக்கின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கூட தங்களது தாய் மொழி இந்தியால் அழிக்கப்பட்டுவிட்டது என்று சட்ட மன்றத்திலேயே பேசக்கூடிய அளவுக்கு தற்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் தமிழகம் தான் ஒரு முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்பது முக்கியம். இப்போது வெவ்வேறு மாநிலங்கள் உள்ள மக்களுக்கு புரிய தொடங்கி இருக்கின்றது.
பாஜகவும்,அதிமுகவும் பொருந்தாக் கூட்டணி. அரசியலுக்காக வலிந்து உருவாக்கப்பட்ட கூட்டணியே தவிர, கொள்கைகளில் ஒருமித்த பார்வையில்லை. மற்ற கட்சிகளுக்கு இடையே இருக்கும் கூட்டணி பொருந்தா கூட்டணி என்று கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}