திருச்சி: அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்துள்ளார்கள். அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? என்பது தெரியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது.
அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்துள்ளார்கள். அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? என்பது தெரியவில்லை. அதே கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.

நடிகர் விஜய் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா? அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் பங்குதாரராக இடம் பெறுவாரா? அல்லது விஜய் தனது தலைமையில் வாருங்கள் என மற்றவர்களை பார்த்து சொல்லுவாரா? என்பது தெரியாது.
எனவே எதிர்க்கட்சிகளிடையே ஒரு ஐக்கியம் உருவாகுவதற்கு போதிய முகாந்திரம் இல்லை. வரும் தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணி தான் மக்கள் செல்வாக்கோடு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதியை பாஜக அரசு செயல்பட வைக்கிறது. பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பது தான் இந்தக் கூட்டணியின் நோக்கம். இந்தியா கூட்டணி தேவையான நேரத்தில் பாஜகவிற்கு சவால் விடக்கூடிய அளவிற்கு நடவடிக்கையில் ஈடுபட்டு தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
"அன்னை மொழி அதுவே நம் விழி"
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
Short Story: ருத்ர தாண்டவம்!
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}