போதை பொருள் பயன்பாடு... விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுங்க.. வீரலட்சுமி சொல்கிறார்!

May 20, 2024,05:26 PM IST

சென்னை: தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக கூறி முன்னணி திரை நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தமிழக அரசிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், தற்போதைய காலத்தில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இந்த போதை பொருட்களின் பயன்பாட்டிற்கு அடிமையாகி வருகின்றனர். சாதாரண மக்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினால். நடவடிக்கை எடுக்கும் போலீசார், திரைப்பிரபலங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை. திரைப்பிரலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, மது விலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறையில் புகார் அளித்து நடவடிக்க எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 




வீரலட்சுமி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:


கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சமூகத்தை சீரழிக்கின்ற வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தடை செய்யப்பட்ட மிகக் கொடிய போதைப் பொருள் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதனால் மாணவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதுடன், கல்வியும் நாசமாகிறது. இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. 


இந்த போதை பொருள் குறித்து அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்தில் இருக்கக்கூடிய சினிமாத்துறையில், துளியும் இந்த மக்கள் மீதும்,  சமூகத்தின்  மீதும்,  மாணவர்கள் மீதும் அக்கறை இல்லாமல் தங்கள் பொறுப்பை உணராமல், தங்களின்  சுப போக வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றன.


பிரபல நடிகர்களான விஜய், தனுஷ், விஜய் யேசுதாஸ், த்ரிஷா, ஆண்ட்ரியா மற்றும் பாடல் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக். உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சிகளின் போது தடை செய்யப்பட்ட கொடிய போதை பொருட்கள் பயன்படுத்தி வருவதாக பாடகி சுசித்ரா பல்வேறு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். சாதாரண மக்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கும் போலீசார் ,பிரபல  நடிகர் நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தி வந்தால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். 


குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்களா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்