வேளாங்கண்ணி: புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயம் உலகப் புகழ் பெற்றது. மத வேறுபாடு இல்லாமல் எல்லா மதத்தவரும் இங்கு வந்து வணங்கி வழிபட்டுச் செல்வது வழக்கம். ஆண்டு தோறும் இங்கு செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஆரோக்கிய மாத திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கொடியேற்றம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர்
வேளாங்கண்ணியில் நேற்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதிய தங்குமிடம், குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல லட்சம் பேர் வேளாங்கண்ணிக்குப் பயணப்படுவார்கள் என்பதால் சிறப்பான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}