ஏசி சண்முகத்திடம் ஒரு கார் கூட கிடையாது.. கதிர் ஆனந்த்திடம் 11 வாகனங்கள்.. அடேங்கப்பா வேட்பாளர்கள்!

Mar 26, 2024,07:17 PM IST

சென்னை:  வேலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் திமுக வேட்பாளர்களிடம் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. 


தமிழ்நாட்டில் சில தொகுதிகளில் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் போட்டியிடுவார்கள். முன்பு கரூர் தொகுதியில் போட்டியிட்டு வந்த கே.சி. பழனிச்சாமிதான் இருப்பதிலேயே பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையுடன் வலம் வந்தார். ஆனால் தற்போது அவரையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வேட்பாளர்கள் வந்து விட்டனர்.


கோடிக்கணக்கில் சொத்து.. சொந்தக் கார் இல்லாத ஏ.சி.எஸ்.




வேலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்ததும் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதில் ஏசி சண்முகத்திற்கு ஏகப்பட்ட சொத்து  இருந்தாலும் சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம். அவருக்கு மட்டுமல்ல அவரது மனைவி பெயரிலும் கார் கிடையாதாம்.


ஏசி சண்முகத்திடம் ரொக்கமாகவும், வங்கியிலுமாக மொத்தம் ரூ. 94 லட்சத்து 64 ஆயிரத்து 43 ரூபாய் உள்ளதாம். அவரது மனைவியிடம் 1 கோடியே 17 லட்சத்து ஆயிரத்து 780 ரூபாய் பணம் உள்ளதாம்.


ஏசி சண்முகத்திடம் ரூ. 30 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 440 ரூபாய் மதிப்பிலான பல்வேறு வகையான முதலீடுகள் உள்ளன. அவரது மனைவியிடம் 26 கோடியே 85 லட்சத்து 27 ஆயிரத்து 492 ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உள்ளன.


பலருக்கு ரூ. 3 கோடியே 93 லட்சத்து 65 ஆயிரத்து 337 ரூபாய் அளவுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார் ஏசி சண்முகம். அவரது மனைவி 7 கோடியே 69 லட்சத்து 14 ஆயிரத்து 908 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். 


ஏசி சண்முகத்திடம் 20 கிலோ வெள்ளி, 2105 கிராம் தங்கம், என மொத்தம் ரூ. 78 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான நகைகள், ஆபரணங்கள் உள்ளன. அவரது மனைவியிடம் இருக்கும் நகைகளின் மதிப்பு ரூ. 1 கோடியே 27 லட்சத்து 8 ஆயிரத்து 100 ஆகும்.


விவசாய நிலம் என்று கணக்கில் எடுத்தால் ஏசி சண்முகத்திடம் 96.01 ஏக்கர் நிலமும், அவரது மனைவியிடம் 68.92 ஏக்கர் நிலமும் உள்ளன.   விவசாயம் அல்லாத நிலமாக, ஏசி சண்முகத்திடம் 38,248 சதுர அடி நிலமும், அவரது மனைவியிடம் 75,846 சதுர அடி நிலமும் உள்ளது.


ஏசி சண்முகம் வசம் 8 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உள்ளனவாம். அவரது மனைவி பெயரில் 2 அபார்ட்மென்ட்கள் உள்ளனவாம்.


திமுக கதிர் ஆனந்த் சொத்துக்கள்:


திமுக வேட்பாளரும் மிகப்பெரிய பணக்காரர்தான். அவரிடம் ரொக்கம் பிளஸ் வங்கி பண இருப்பாக 16 கோடியே 74 லட்சத்து 90 ஆயிரத்து 596 ரூபாய் உள்ளது.. அவரது மனைவி சங்கீதாவிடம் ரூ. 6 கோடியே 95 லட்சத்து 4 ஆயிரத்து 438 ரூபாய் உள்ளது. கதிர் ஆனந்த் மகளிடம் ரூ. 3 கோடியே 22 லட்சத்து 4 ஆயிரத்து 35 ரூபாய் உள்ளதாம்.


கதிர் ஆனந்த் வசம் ரூ. 12,94,68,883 அளவிலான முதலீடுகள் உள்ளன. மனைவியிடம் ரூ. 3,44,17,434 மதிப்பிலான முதலீடுகள் உள்ளன.


கதிர் ஆனந்த்திடம் பல்வேறு வகையான 11 கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 41,62,732 ஆகும். அவரது மனைவியிடம் ரூ. 1,35,12,530 மதிப்பிலான வாகனங்கள் உள்ளன.


கதிர் ஆனந்த்திடம் ரூ. 2,07,23,976 மதிப்பிலான தங்கம் வெள்ளி, வைரம் நகைகள் உள்ளன.  மனைவியிடம் ரூ. 57,75,902 மதிப்பிலான நகைகள் உள்ளன. இவை தவிர   ஏகப்பட்ட ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலம் உள்ளிட்டவையும் கதிர் ஆனந்த் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ளதாக அபிடவிட்டில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

அதிகம் பார்க்கும் செய்திகள்