- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: சாம்பார் பிடிக்காதவங்க யாரும் இருப்பாங்களா.. அதிலும் வெண் பூசணி பருப்பு சாம்பார் வாசமே சும்மா தூக்கும். பிரேக்பாஸ்ட் மட்டுமல்லாமல் லஞ்ச்சுக்கும் கூ இது செமையான டிஷ்ஷுங்க.
வாங்க வெண்பூசணி பருப்பு சாம்பார் வச்சு சாப்பிட்டுப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
1.துவரம் பருப்பு - 1 கப் (கழுவியது)
2. பூண்டு - 6 பல் (தோல் நீக்கியது)
3. சீரகம் - 1 ஸ்பூன்
4. பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்
5. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
6. சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
7. நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
8. கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - தலா 1 ஸ்பூன் தாளிக்க
9. சின்ன வெங்காயம் - 10 (தோல் நீக்கியது.
10. தக்காளி - 1
11. புளிக்கரைசல் - 1/4 கப்
12. வெண்பூசணி - 1/4 கிலோ
13. உப்பு, காரம் - சுவைக்கும், தேவைக்கும் ஏற்ப.
செய்முறை :
1. குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், சீரகம், 1/4 ஸ்பூன் எண்ணெய், பூண்டு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூசணி போட்டு நன்கு வதக்கவும். பிறகு சாம்பார் பொடி சேர்க்கவும். அதோடு நறுக்கிய தக்காளி சேர்த்து வாசனை வரும் வரை வதக்க வேண்டும். சிறிது தண்றீர் ஊற்றி, புளிக்கரைசலையும் சேர்க்க வேண்டும்.
3. இதனை பருப்புடன் சேர்த்து, பூசணி வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்து, 1 சிறிய வெங்காயம், பூட்டு தட்டி போட்டு வதக்க வேண்டும்.
5. சாம்பாருடன், தாளிப்பை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து லேசாக கொதி வந்ததும் இறக்கி பரிமாறினால், சூடான வெண்பூசணி பருப்பு சாம்பார் ரெடி.
வெண்பூசணி பயன்கள் :
1. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவும்
2. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நீரிழிவு நோய்க்கு, குடலில் உள்ள நாடா புழுக்கள் வெளியேற உதவும்.
3. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எலக்ட்ரோலைட்க்கு சமமான உணவு இது
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவு
5. பெண்களின் வெள்ளைப் போக்கு நீங்கும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}