Cooking Time: சட்டென செய்ய 2 வகை சட்னி.. வேர்க்கடலை புதினா, பொட்டுக்கடலை மல்லி சட்னி!

Nov 18, 2024,02:32 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: இன்னிக்கு நாம ரெண்டு வகையான சட்னி பார்க்கப் போறோம்.. ஒன்னு வேர்க்கடலை புதினா சட்னி, இன்னொன்னு பொட்டுக்கடலை (அதாங்க உடைச்ச கடலை) மல்லி சட்னி... ஸோ ஒரே டிப்ஸ்ல, 2 சட்னி.. என்ஜாய் பண்ணுங்க.. வாங்க நேரடியா கிச்சனுக்குள்ள புகுந்துரலாம்.




தேவையான பொருட்கள் :


1. கடலை பருப்பு - 1 ஸ்பூன்

2. உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்

3. வேர்க்கடலை (பச்சையானது) - 3 ஸ்பூன்

4. பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்

5. தேங்காய் துருவல் - 10 ஸ்பூன்

6. எண்ணெய் - 2 ஸ்பூன்

7. சீரகம் - 1 ஸ்பூன்

8. வர மிளகாய் - 3

9. பச்சை மிளகாய் - 2

10. புதினா - 1 கைப்பிடி

11. மல்லித்தழை - 1 கைப்பிடி

12. புளி - 1/2 நெல்லி சைஸ்

13. பூண்டு - 6 பல்

14. இஞ்சி - சிறிதளவு

தாளிக்க - எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

உப்பு, புளி, காரம் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப


செய்முறை :


வேர்கடலை சட்னி :


1. கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, புளி, வேர்க்கடலை ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். அதோடு தேங்காய் 3 ஸ்பூன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.


2. சீரகம், வரமிளகாய் சேர்த்து ஸ்டவ் அணைத்த பிறகு அதே சூட்டில் புதினா இலைகளை போட்டு வதக்கவும்.


3. ஆறிய பிறகு மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு எண்ணெய் விட்டு தாளித்து பரிமாறலாம்.


பொட்டுக்கடலை சட்னி :


1. மிக்ஸியில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


2. அதோடு 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து, இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.


3. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்தால் கெட்டி சட்னி ரெடி.


இந்த இரண்டு சட்னிகளும் பிரேக் ஃபாஸ்ட், டின்னர் இரண்டிற்கும் மிகவும் ஏற்றவை. இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், ராகி களி ஆகியவற்றிற்கு அல்டிமேட் சைட் டிஷ். சாதம், பொங்கல், கருப்பு கவுனி அரிசி பொங்கல் ஆகியவற்றையும் இந்த சட்னி உடன் சாப்பிட்டால் அடடே...அடடே...னு அப்படி இருக்கும்.


வேலைக்கும் செல்லும் பெண்கள், பிகினர்ஸ், பேச்சுலர்ஸ், தனிக்குடித்தனம் வந்த புதுமணத் தம்பதியருக்கு ஈஸியாக செய்யக் கூடிய எளிமையான இந்த சட்னிகளை நீங்களும் டிரை பண்ணி பார்த்துட்டு எப்படி இருக்குணு சொல்லுங்க.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்