சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் நேற்று வெளியான வேட்டையன் படம் தனது முதல் நாளில் இந்தியாவில் ரூ. 30 கோடியை வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ரூ. 26 கோடி அளவில் வேட்டையன் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்டையன் படம் குறித்து பல நெகட்டிவான விமர்சனங்கள் அதிகம் வந்தன. குறிப்பாக முக்கியமான பல விமர்சகர்களே கூட படத்தில் நிறைய பிளஸ் பாயின்ட்டுகள் இருந்தாலும் கூட இன்னும் சிறப்பாக இதை எடுத்திருக்கலாம், 2வது பாதி சரியாக இல்லை, இழுவையாக இருக்கிறது என்று விமர்சித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் கூட ரூ. 30 கோடி அளவுக்கு முதல் நாள் வேட்டையன் வசூலித்ததே பெரிய சாதனைதான்.
ஜெயிலர், கோட்டுக்குப் பின்னால்தான் வேட்டையன்:
இருப்பினும் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலையும், விஜய்யின் கோட் பட முதல் நாள் வசூலையும் முந்தத் தவறி விட்டது வேட்டையன். ஜெயிலர் படம் முதல் நாளில் ரூ. 48 கோடியை வசூலித்திருந்தது. கோட் படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 44 கோடியாகும். இதை முறியடிக்கத் தவறி விட்டது வேட்டையன்.
தனது 73 வயதிலும் கூட, இளம் நடிகர்களுக்கு இணையாக கடும் டஃப் கொடுக்கிறார் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வசூல் பெரிய விஷயம்தான்.
கோட்டின் சாதனையும் முறியடிக்கப்படவில்லை:
தமிழ்நாட்டில் வேட்டையன் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட ரூ. 26.15 கோடியாகும். தெலுங்கில் ரூ. 3.2 கோடியை வசூலித்துள்ளது. இந்தியில் ரூ. 60 லட்சம் வசூலாகியுள்ளதாம். ஒட்டுமொத்தமாக ரூ. 70 கோடி வசூலை உலக அளவில் வேட்டையன் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த இடத்தில் கோட் படத்தின் முதல் நாள் ஒட்டுமொத்த வசூலையும் வேட்டையன் முறியடிக்கவில்லை. கோட் படம் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக ரூ. 120 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் பாதிக்கு மேல்தான் வேட்டையன் படத்துக்கு வந்துள்ளது.
முதல் நாளில் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆகவில்லை என்பது இன்னொரு ஆச்சரியமான விஷயம். முதல் நாள் திரையரங்குகளின் டிக்கெட் ஸ்டேட்டஸ் கிட்டத்தட்ட 60 சதவீதம் என்று சொல்கிறார்கள். தெலுங்கில் இது 38 சதவீதமாக இருந்தது. இந்தியில் வெறும் 9 சதவீத இருக்கைகளே நிரம்பியிருந்தனவாம். இருப்பினும் இன்றும் நாளையும் கூட்டம் அதிகரித்து வேட்டையன் வசூலும் ஒட்டுமொத்தமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
அண்ணாத்த வசூலை முந்திய வேட்டையன்:
வேட்டையனுக்கு நேற்று கிடைத்த பெரிய ஆறுதல் என்றால் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலை அது முந்தியதுதான். அண்ணாத்த படத்தின் முதல் நாள் இந்திய வசூல் ரூ. 29.9 கோடியாகும். நல்ல வேளை அதை ஜஸ்ட் முந்தி விட்டது.
இருப்பினும் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா, சிங்கப்பூரில் வேட்டையன் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக திரை விமர்சகர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன், ரோகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}