சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவருடன் இணைந்து அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், மஞ்சுவாரியர், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உலக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக தயாராக உள்ளது.

முன்னதாக அனிருத் இசையில் மனசிலாயா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் காக்கா கழுகு குறித்த ரஜினியின் குட்டி ஸ்டோரி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன மாதிரியான குட்டிக்கதை பேசுவார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}