குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா.. உடல் நிலை குறித்து கவனம் செலுத்தப் போவதாக கடிதம்

Jul 21, 2025,09:58 PM IST

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.


குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், "மருத்துவ ஆலோசனை" மற்றும் தனது ஆரோக்கியத்திற்கு "முன்னுரிமை" அளிக்கும் வகையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தனது ராஜினாமா முடிவைத் தெரிவித்துள்ளார்.


"எனது உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 67(அ)-ன் படி, நான் எனது இந்தியக் குடியரசு துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்" என்று அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அந்தக் கடிதத்தில், "எனது பதவிக் காலத்தில் நீங்கள் அளித்த அசைக்க முடியாத ஆதரவுக்கும், நாம் பேணி வந்த இனிமையான அற்புதமான பணி உறவுக்கும்" குடியரசுத் தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


"மாண்புமிகு பிரதமருக்கும், மதிப்பிற்குரிய அமைச்சரவைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை, மேலும் நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்" என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மறக்க முடியாத ஜெகதீப் தன்கர் - மமதா பானர்ஜி மோதல்கள்


கடந்த 2022ம் ஆண்டு நடந்த குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர். வெங்கையா நாயுடுவுக்குப் பிறகு இந்தப் பதவிக்கு அவர் வந்தார்.


வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியானவர். மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்தபோதுதான் அவர் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவருக்கும், அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இடையே நடந்த எலி - பூனை சண்டை மிகப் பிரபலமானது. இந்தப் பதவியிலிருந்துதான் அவர் பின்னர் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு வந்தார். 


குடியரசுத் துணைத் தலைவர்தான் ராஜ்யசபா தலைவராகவும் இருக்கிறார் என்பதால் ராஜ்யசபாவிலும் இவரது செயல்பாடுகள் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தத் தவறவில்லை. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் இவருக்கும் இடையிலான அனல் பறக்கும் வார்த்தைப் போர் மறக்க முடியாதது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்