புதுடெல்லி: நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக உறவினரும் பயிற்சியாளரான மகாவீர் சிங் போகத் தெரிவித்துள்ளார்.
16 பேர் கொண்ட சுற்றில் நாக் அவுட் சுற்று, கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆகிய மூன்று போட்டிகளிலும் விளையாடி வெற்றி பெற்றார் வினேஷ் போகத் .இதனைத் தொடர்ந்து இன்று இறுதிப்போட்டி நடக்க இருந்தது. அதன் முன்னதாக ஒலிம்பிக் மல்யுத்த விதிமுறைகளின் படி 50 கிலோ எடை பிரிவில் சரியாக 50 கிலோ இருக்க வேண்டும். மாறாக நேற்று மாலை அவர் எடை கூடுதலாக 2 கிலோ இருந்துள்ளரா.
இதையடுத்து எடையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி செய்துள்ளார். விடிய விடிய உடற்பயிற்சி செய்தும் கூட அவரது இறுதி எடை 50 கிலோ 100 கிராமாக இரு்நதது. இதனால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக இரவு முழுவதும் சாப்பிடாமல் தூங்காமல் விடிய விடிய உடற்பயிற்சி செய்து ஒரே இரவில் 1.85 கிலோ எடையை குறைத்ததால் அவரது உடல் பலவீனமடைந்தது. நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டது.
மயக்க நிலையில் இருந்த அவர் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்திலேயே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விக்னேஷ் போகத் சுய நினைவில்லாமல் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வினேஷ் போகத்தின் பெரியப்பாவும் பயிற்சியாளருமான மகாவீர் சிங் போகத் தகவல் தெரிவித்துள்ளார். அதேசமயம், அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}