சென்னை: விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர் அவர் ஏறிய இரண்டு மேடைகளிலும் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவும் மாறியது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் கட்சி ஆண்டு விழாவில் என்ன பேசுவார் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
கடந்த 2024 பிப்ரவரி 2ம் தேதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கட்சி தெடங்கியதும், விஜய் தனது சினிமா கேரியரை முடித்து விட்டு தான் முழுவதுமாக கட்சி பணிகளில் இறங்க உள்ளதாக அறிவித்தார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பேரிடியாகவே இருந்தது என்று சொல்லலாம். ஆனாலும் சினிமாவை விட மிகப் பெரிய களத்திற்கு விஜய் வருவது அவர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தது.
வி. சாலையில் முத்திரை பதித்த முதல் பேச்சு
அதனை தொடர்ந்து, அரசியல் தலைவராக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அவரது தலைமையில் விக்கிரவாண்டி வி சாலையில் நடந்த மாநாடு அரசியல் அரங்கில் பல்வேறு பிரளயங்களை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். விஜய் அதில் பேசிய பேச்சு இன்று வரை பேசு பொருளாக அனைத்து தொலைக்காட்சி விவாத மேடைகளையும் அதிர வைத்து வருகிறது. மறுபக்கம் விஜய் பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துப் பேசியும், விமர்சித்து வந்தன. இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம், நாம் திரையில், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பார்த்த விஜய்யா இது? என அனைத்து ரசிகர்களும் வாய் பிளக்கும் அளவிற்கு பேசியிருந்தார் விஜய்.
"அரசியலுக்கு தான் குழந்தை தான். அரசியல் பாம்பை கையில் பிடித்து விளையாட பயப்பட போவதும் இல்லை. பின்வாங்க போவதும் இல்லை" என்று தெளிவாக தெரிவித்திருந்தார். ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி போல் அனைத்து விமர்சனங்களையும் பட்டியலிட்டு முதல் மேடையிலேயே வெளுத்து வாங்கினார். அரசியலில் ஜெயிச்சவங்க தோத்தவங்க என அத்தனை பேர் பாடத்தையும் கற்று தெரிந்து தான் அரசியல் களத்தில் குதித்து இருக்கிறேன். பல பேரின் உந்துதலை ஊக்கமாக எடுத்துக்கொண்டு என்னுடைய கேரியரின் உச்சத்தை உதறி தள்ளிவிட்டு அந்த ஊதியத்தை உதறி தள்ளிவிட்டு உங்கள் விஜய்யா உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கேன் என்று பேசிய பேச்சு அரவது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களை மனம் கழங்க வைத்துவிட்டது.
அதிர வைத்த அம்பேத்கர் விழா மேடைப் பேச்சு
இந்த மாநாடு பேச்சு விவாதித்து முடிப்பதற்குள், அடுத்த படியாக டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு வந்தது. விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்றார். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் அம்பேத்கர் பற்றிய நேர்காணலும் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதால், தான் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து, அதற்கு விளக்கமும் அளித்திருந்தார் திருமாவளவன். அதே சமயம் விஜய் பங்கேற்க உள்ளது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது.
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களின் சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்றும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு திருமாவளவனுக்கு பிரஷர் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. என்று சீரும் சிங்கமாக அவரது இந்த பேச்சு இருந்து.
மலைக்க வைக்குமா மாமல்லபுரம் பேச்சு?
இதனையடுத்து, தவெக கட்சியின் முதலாம் ஆண்டு விழா மிக பிரம்மாண்டமாக நாளை நடைபெற உள்ளதாக தவெக கட்சி தலைமை அறிவித்துள்ளது. தவெகவின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் விஜய் 30 நிமிடம் பேச இருப்பதாகவும், அந்த 30 நிமிட பேச்சும் அரசியல் சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு விழாவில் விஜய் என்ன பேசுவார். யாருக்கு ஆப்பு வைக்க காத்துள்ளார் என்று விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாளைக்கு ஒரு சம்பவம் இருக்கும் என்றும் இணையதள பக்கங்களில் கமண்டுகளையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். கண்டிப்பாக கூட்டணி குறித்தோ அல்லது வேறு ஏதேனும் அதிரடி குறித்தோ விஜய் நிச்சயம் பேசக் கூடும் என்று ரசிகர்கள் படு ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}