கோவை: யார் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க. ஆனா நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க என்று இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் ரோமியோ. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வரும் 11ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசுகையில், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தான் ரோமியோ திரைப்படம் உருவாகி உள்ளது. குறிப்பாக, மனைவிமார்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. ஒவ்வொரு கணவரும் தனது மனைவியை இப்படத்துக்கு அழைத்து வரவேண்டும்.
ரோமியோ படம் காதல் குறித்து விளக்குவதாகவம், திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த படத்தில் பேசி இருக்கிறோம்.பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள். ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவது ஒரு தாய், மனைவி போன்றவர்களே. நல்ல படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
நான் அனைத்து கட்சிக்கும் ஆதரவு அளிக்கிறேன். அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். வாக்குக்கு பணம் கொடுப்பதோ, பெறுவதோ தவறாக இருந்தாலும் வறுமை குடும்ப சூழ்நிலை கருதி அதைப் பெற்றுக் கொள்ளலாம். அது உங்கள் பணம் தான். ஆனால் பணம் பெற்று விட்டோம் என்பதற்காக அந்த கட்சிக்குதான் வாக்கு செலுத்துவோம் என்று இல்லாமல் நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளார்.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}