சென்னை: நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் கம்மிட்டான படங்களை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் களமிறங்க உள்ள நிலையில், ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகபடுத்தும் வகையில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைக்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதனை விஜயின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் போட்டியிட இருக்கிறது இக்கட்சி.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய், பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், லைலா, சினேகா, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயின் 69 வது படம் தயாராக உள்ளது. இதனையும் முடித்துவிட்டு சினிமா வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டு விட்டு முழு நேர அரசியல்வாதியாக களம்காண இருக்கிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்களுக்கு, உற்சாகம் கொடுக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான மாநாடு நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டை எங்கு நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனையை அக்கட்சி தலைமை ரகசியமாக மேற்கொண்டுள்ளது. மாநாடு நடத்த முக்கியமான சில நகரங்கள் குறித்து ஆலோசனை செய்துள்ளனர்.
மதுரையா திருச்சியா
திருச்சி தமிழ்நாட்டிற்கு மையமானது, எனவே அங்கு நடத்தலாம் என ஒரு கருத்து ஆலோசிக்கப்பட்டது. அதேசமயம் அதிமுக மற்றும் தேமுதிக புதிய கட்சியை தொடங்கிய போது முதல் மாநாட்டை மதுரையில் தான் நடத்தினார்கள் என்பதால் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடும் மதுரையில் நடத்தலாம் என்று இன்னொரு ஆலோசனை வைக்கப்பட்டது.
இந்த இரண்டு ஊரும் வேண்டாம் கோவை அல்லது சேலத்தில் வைத்தால், மேற்கு தமிழ்நாட்டை ஈஸியாக கவர் செய்யலாம் என்று ஒரு தரப்பு ஆலோசனை கூறியதாம். இல்லாவிட்டால் சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் மாநாடு நடத்தவும் ஒரு பரிசீலனை செய்யப்பட்டதாம். இந்த மாநாடு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு என்பதால் மிகச் சிறப்பாக நடத்த கட்சித் தலைவரான விஜய் ஆர்வமாக உள்ளாராம்.
இந்த ஆலோசனையில் தற்போது திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி கசிந்து வருகிறது. மாநாடு நடத்தப்படும் இடம் குறித்து சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளாரம். இதனால் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர். தொண்டர்கள், ரசிகர்கள் என பல மாநிலங்களில் இருந்தும் படை போல கிளம்பி வர காத்துக் கிடக்கிறார்களாம்.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடியும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் அதற்கான வேலையும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.மாநாடு எங்கு நடைபெறும் என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேசமயம் எங்கே மாநாடு நடந்தாலும் பட்டையைக் கிளப்புவது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}