- மஞ்சுளா தேவி
சென்னை: லியோ பட தயாரிப்பாளரான லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார். "தளபதி" விஜயை பூக்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மிகவும் எளிமையாக பிளாக் அண்ட் ஒயிட் சட்டை அணிந்து
விஜய் புது கெட்டப்பில் வலம் வந்தார். முகத்தில் புன்னகையுடன் மணமக்களை வாழ்த்தினார். சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலிருந்து இன்னும் விஜய் மாறவில்லை. அடுத்த படத்துக்கான கெட்டப்பா இது என்றும் தெரியவில்லை. ஆனால் பார்க்க சூப்பரான எனர்ஜியுடன் காணப்பட்டார் விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. இப்படத்தில் திரிஷா, சஞ்சய்தத் ,அர்ஜுன் ,மன்சூர் அலிகான் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்தனர். இப்படத்தை சிவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க அனிருத் இசையமைத்தார்.

7ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர்தான் லலித் குமார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்தவர். லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் படத்தின் வெற்றி விழாவை மிகப்பெரிய அளவில் நடத்தி முடித்தார் தயாரிப்பாளர் லலித் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}