புதுச்சேரியில் ரோடுஷோ...ரசிகர்களின் அல்ட்ராசிட்டியால் பதறி போன விஜய்

Apr 04, 2026,05:07 PM IST

புதுச்சேரி : புதுச்சேரியில் பிரச்சாரத்திற்காக சென்றுள்ள தவெக தலைவர் விஜய், ஆர்வமிகுதியால் ரசிகர்கள் செய்யும் செயல்களால் பதறி போய் உள்ளார். இதனால் விஜய் போகும் பாதைகளில் மட்டுமல்ல, விஜய்யே பதற்றத்தில் இருந்து வருகிறார்.


புதுச்சேரி சட்டசபையில் உள்ள 30 இடங்களுக்கு வரும் ஏப்ரல் 09ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெக போட்டியிடுகிறது. அங்கு போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரிப்பதற்காக புதுச்சேரியில் 19 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக 3 இடங்களில் மட்டுமே விஜய் பிரச்சாரம் செய்ய போலீசார் மற்றும் தேர்தல் கமிஷன் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 05ம் தேதி விஜய் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதே தேதியில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரத்திற்கு வர உள்ளதால் விஜய்யின் பிரச்சாரம் ஏப்ரல் 04ம் தேதிக்கு மாற்றப்பட்டது.




இதன் படி, அனுமதி வழங்கப்பட்ட புதுச்சேரியின் 3 இடங்களில் பிரச்சாரம் செய்வதற்காக இன்று காலை சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் விஜய். அவரது கார் செல்லும் வழிகளில் பல இடங்களில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக விஜய்யின் காரின் முன்புறம் ஏறி, படுக்க துவங்கினர். விஜய்யை பக்கத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் பலரும் கார் மீது ஏறியதால் விஜய்யும், பவுன்சர்களும் பதறி போயினர். பவுன்சர்கள் ரசிகர்கள் பலரையும் காரின் மீது இருந்து தூக்கி, அகற்றிய போதும் தொடர்ந்து வந்த ரசிகர்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.


பிறகு புதுச்சேரி எல்லையில் விஜய் தனது காரில் இருந்து, திறந்த பிரச்சார வாகனத்தில் ஏறி பயணம் செய்ய துவங்கினார். விசில் சின்னத்திற்காக ஓட்டு சேகரிக்க திறந்த வாகனத்தில் அவர் ரோடுஷோ நடத்திய போது, சிறுவன் ஒருவன் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் முன்புறம் ஏறி வந்ததால் விஜய் பதறி போய், அவரை கீழே இறங்கும் படி அறிவுறுத்தினார். விஜய் பலமுறை கூறிய பிறகே அந்த சிறுவன் பிரச்சார வாகனத்தின் மீதிருந்து கீழே இறங்கினான். இதனால் விஜய் செல்லும் வழி நெடுகிழும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்