பாட்டிலுக்கு பத்து ரூபா.. கரூரில் பாட்டுப் பாடிய விஜய்.. களைப்பை மறந்து கூட்டத்தினர் ஆரவாரம்!.

Sep 27, 2025,07:43 PM IST
கரூர்: நாமக்கல் கூட்டத்தை முடித்து விட்டு கரூர் வந்த விஜய், கடும் கூட்டத்தினருக்கு மத்தியில் பெரும் சிரமப்பட்டு பேசும் இடத்தை வந்தடைந்தார். ஆனால் கூட்டத்தினர் களைப்பைப் போக்கும் வகையில் ஒரு பாட்டுப் பாடி குஷியாக்கி விட்டார்.

நாமக்கல் கூட்டத்தையும், கரூர் கூட்டத்தையும் இன்று விஜய் திட்டமிட்டிருந்தார். இரண்டுமே கடும் கூட்ட நெரிசல் காரணமாக தாமதமாகவே நடந்து முடிந்தன.

கரூரில் அந்த ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்குத்தான் மிகப் பெரிய பல ஆயிரம் பேர் கூடுவார்கள். அதேபோல இன்றைய விஜய் பேச்சையும் கேட்க பல ஆயிரம் பேர் கூடியிருந்ததால் கரூரே ஸ்தம்பித்துப் போனது. கூட்ட இடத்திற்கு விஜய் வந்து சேருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதை விஜய்யே தனது பேச்சில் குறிப்பிட்டார்.

விஜய்யின் கரூர் பேச்சிலிருந்து:

முதலில் காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் இல்லாவிட்டால், பைபாஸ் ரோட்டிலிருந்து இந்த இடத்துக்கு வந்திருக்க முடியுமான்னு தெரியலை. எனவே மீண்டும் அவர்களுக்கு நன்றிகள். அமராவதி ஆற்றங்கரையில் இருக்கக் கூடிய ஊர் கரூர். மிக முக்கியமான டெக்ஸ்டைல் மார்க்கெட் ரொம்பப் பிரபலம்.  கரூர் பற்றி பெருமையாக சொல்லக் கூடியவை நிறைய இருக்கு. ஆனால், சமீப காலமாக இந்தியாவிலேயே கரூர் அப்படின்னு சொன்னாலே ஒரே ஒரு பெயர்தான் பேமஸா தெரியும்.  அதுக்கு யார் காரணம்.. உங்களுக்குத்தான் தெரியுமே. அதைப் பத்தி அப்புறமா பேசுவோம். 

அது செய்வோம் இது செய்வோம்னு இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் சொன்னாங்கள்ள. அது ஒரு சின்ன லிஸ்ட்தான். அதைப் பற்றிப் பார்ப்போம். 




கரூர் மாவட்டத்தில் பேரிச்சை வளர்க்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் நிதி உதவி வழங்கப்படும் என்று அவர்கள் கொடுத்த  வாக்குறுதி நம்பர் 81.. பேரீச்சை மரத்தை விடுங்க.. பேரீச்சம் விதையாவது கண்ணில் காட்டுனாங்களா.. துபாய் குறுக்கு சந்து கதைதான். கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும்னு 448வது வாக்குறுதி எண்.. ஆட்சியே முடியப் போகுது. நாலரை வருடம் முடிஞ்சிருச்சு. இப்பப் போய் ஒன்றிய அரசு கிட்ட கோரிக்கை வைக்கிறார் அமைச்சர். ஏர்போர்ட் கட்டணும்னு. அய்யா அமைச்சரே.. இதுதான் உங்க டக்கா! கரூர்ல விமான நிலையம் வந்தா ஜவுளித்தொழில் நல்லா டெவலப் ஆகும். அதேசமயத்தில் பரந்தூர் மாதிரி மக்கள் பாதிக்காத இடத்தில் கட்டுனா நல்லது.

மணல் கொள்ளை. கரூரின் தீராத தலைவலி. வறண்ட மாவட்டமாக மாற்றியது மட்டுமல்லாமல், சட்டவிரோத கல் குவாரிகள், கணிம வளத்தை அழித்துக் கொண்டிருக்கு. இதுக்கு யார் காரணம்.. 11 மணிக்கு பதவியேற்றுக்கிட்டா கொள்ளையடிக்காலம் என்று ஓபனாக சொல்லியவர்களாச்சே உங்க ஆட்கள்.

தமிழ்நாட்டின் 3வது பெரிய ஏரி இங்குள்ள பஞ்சப்பட்டி ஏரி.  1000 ஏக்கருக்கு மேல். நல்லா இருந்தா விவசாயம் செழிப்பா இருக்கும். பல லட்சம் குடும்பம் சந்தோஷமா இருக்கும். பல வருடமாக சீரமைக்காம போட்டு வச்சிருக்காங்க. நம்ம ஆட்சி வரும், உங்க ஆட்சி வரும். அப்போது இந்த ஏரிக்கு உயிர் வரும். உங்க முத்தில் சந்தோஷம் திரும்ப வரும். ஜவுளித்தொழிற்சாலைகளின் கழிவுகளை சுத்திகரிக்க அறிவியல் பூர்வமான நடவடிக்கையை எந்த அரசும் எடுக்கவில்லை. இதைத் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளை நாம முன்னெடுப்போம்.

அடுத்து அந்த முக்கிய விஷயத்துக்கு வருவோம். எதுக்கு சுத்தி வளச்சிட்டு. கரூரில்  மந்திர மந்திரின்னு ஒருத்தர் இருந்தார்ல.. இப்ப இல்லை. ஆனாலும் மந்திரி மாதிரி.. யார்னு சொல்லித்தான் தெரியுமா என்ன.. ஒரு க்ளூ தரவா.. பாட்டிலுக்கு பத்து ரூபா.. பாட்டிலுக்குப் பத்து ரூபா.. (இந்தப் பாடலைப் பாடியது உங்கள் விஜய்!) 

இங்க ஒரு விழா நடந்துச்சே.. முப்பது பேரு விழா.. அதாவது முப்பெரும் விழா.. மாண்புமிகு சிஎம் அவர்கள் அந்த மாஜி மந்திரியை உச்சி மேல தூக்கி வச்சு மெச்சியதை கேட்டோம் இல்லையா. இதே சிஎம் எதிர்க்கட்சியா இருந்தப்போ என்னெல்லாம் சொன்னாரு, கேட்டாரு.. யூடியூப் ஓபன் பண்ணிப் பாருங்க. தெறிச்சிருவீங்க.. மிரண்டுருவீங்க.. அந்த மாஜி மந்திரி இப்ப என்னவா இருக்காருன்னு மக்கள் பேசிக்கிறாங்க தெரியுமா.. திமுக குடும்பத்துக்கு ஊழல் செய்யும் பணத்தை 24 மணி நேரமும் டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷினா இருக்காராம். இதை நான் சொல்லலை. ஊருக்குள்ள பேசிக்கறாங்க.

இன்னும் ஆறு மாதம்தான் ஆட்சி மாறும் அதிகாரம் கை மாறும். எல்லோருக்கும் சுத்நதிரம் பாதுகாப்பும் கிடைக்கும் என்றார் விஜய்.

நாமக்கல் கூட்டத்தின்போது மைக் சரியில்லை என்று கூறியிருந்தார் விஜய். ஆனால் கரூர் கூட்டத்தின்போது அவரது பேச்சுக்கு பல குறுக்கீடுகள் வந்தன. ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி வந்தன. கூட்டத்தின் இடையே ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விஜய் தனது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேச வேண்டியதாயிற்று. இதனால் அவரது பேச்சிலும் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. இதனால் கரூர் கூட்டமும் பெரிய அளவில் பரபரப்பைக் கொடுக்கவில்லை. அதேசமயம், கூட்டத்தினரை குஷிப்படுத்தும் வகையில் விஜய் பாடியது அனைவரையும் கவர்ந்தது. அதை அவர் முதலிலேயே பாடியிருந்தால் வேற மாதிரியாக இன்றைய கூட்டம் போயிருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் விபரீதத்தில் 36 பேர் பலி.. தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

கரூர் கூட்ட நெரிசல் பலி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா வேதனை - இரங்கல்

news

கரூரில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் வேதனை

news

கரூர் சம்பவம்.. போதிய பாதுகாப்பு இல்லாததால் நடந்ததா?.. விசாரணை கோருகிறார் அண்ணாமலை

news

கரூரில் விபரீதம்.. விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் மரணம்.. அமைச்சர்கள் விரைந்தனர்

news

பாட்டிலுக்கு பத்து ரூபா.. கரூரில் பாட்டுப் பாடிய விஜய்.. களைப்பை மறந்து கூட்டத்தினர் ஆரவாரம்!.

news

4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

news

கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார் சீமான்.. திமுக கண்டனம்

news

யோவ் என்று விளித்து.. தவெக தலைவர் விஜய்க்குப் பதிலடி கொடுத்த திமுக ராஜீவ் காந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்