சென்னை : கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜய் வீடியோ காலில் பேசி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருவதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையிலும் தலா 2 மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக தவெக தலைவர் விஜய் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி திருச்சியில் செப்டம்பர் 13ம் தேதி தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கினார் விஜய். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்த விஜய், செப்டம்பர் 27ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கரூர் சென்றார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் போலீசார் அனுமதித்த இடத்தில் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவிலான மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்கள். பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தவெக கட்சியை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மற்றொரு புறம் பலரும் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டு வருகிறார்கள். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அவரது கட்சியினரோ நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறவில்லை என பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த கட்ட செயல்பாடு குறித்து தவெக.,வினரிடம் விசாரித்த போது, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுடன் வீடியோ காலில் பேசி, விஜய் ஆறுதல் தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. உங்களுடன், உங்களுக்காக நான் இருக்கிறேன் என ஆறுதல் கூறி வருகிறாராம். இதுவரை 4 முதல் 5 குடும்பத்தினருடன் விஜய் பேசி உள்ளாராம். தவெக கட்சி சார்பில் நிர்வாகிகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து, விஜய் ஏற்கனவே அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!
ஆசிரியர் ஓர் அகல்விளக்கு
{{comments.comment}}