சென்னை : கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். வரும் நாட்களில் பற்பல மாற்றங்களை அரசியல் களம் காணவுள்ளதாகவும் அனுமானிக்கப்படுகிறது.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை வேறு மாதிரியான அரசியல் களம் இருந்தது. ஆனால் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு மொத்த அரசியல் கட்சிகளும் விஜய் பக்கம் திரும்பும் நிலை ஏற்பட்டது. விஜய்யின் செல்வாக்கும், அவர் மீதான எதிர்பார்ப்பும் படு வேகமாக ஏறி வந்தன. மிகப் பெரிய புரட்சியை செய்து விடுவாரோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. விஜய்யை கூட்டணியில் சேர்க்க அதிமுக, பாஜக என இரு கட்சிகளுமே மறைமுகமாக முயன்று வந்தன. ஆனால் விஜய் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளையும் அவர் எதிர்க்க ஆரம்பித்தார்.
மறுபக்கம் திமுக தரப்பு தொடர்ந்து விஜய்யை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கடுமையாக விமர்சித்து எதிர்த்து வந்தது. அதேசமயம், அடக்கியும் வாசித்து வந்தது. ஆனால் கரூர் கூட்டத்திற்குப் பிறகு நிலைமை டோட்டலாக மாறிப் போயிருக்கிறது. விஜய் யாரையெல்லாம் ஒதுக்கி வந்தாரோ அவர்கள் தற்போது விஜய்க்கு ஆதரவாக மாறியுள்ளனர். மறுபக்கம் திமுக படு வேகமாக விஸ்வரூபம் எடுத்து விஜய்யை நொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. திமுகவை விட திமுக ஆதரவாளர்கள், திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள்தான் படு வேகமாக விஜய்யை டேமேஜ் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் களம் தற்போது புதிய காட்சிகளைக் காண ஆரம்பித்துள்ளது. அதாவது அதிமுக பக்கமாக விஜய்யை நகர்த்தும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இப்போது விஜய்க்கு அதைத் தவிர வேறு வழியும் இருப்பதாக தெரியவில்லை. காரணம், அனைத்து மட்டங்களிலும் விஜய்யை தனிமைப்படுத்த ஆரம்பித்து விட்டது திமுக மற்றும் திமுக அரசு. அவரது அரசியல் செயல்பாடுகளை முற்றிலுமாக முடக்கும் வேலையையும் திமுக அரசு செய்யும் என்று சொல்கிறார்கள். அதற்கேற்பத்தான் விஜய்யின் செயல்பாடுகளும் படு மோசமாக உள்ளன. சட்ட ரீதியாகவே இதை செய்யவும் முடியும். அந்த அபாயத்திலிருந்து தப்பிக்க அதிமுக அல்லது பாஜகவுடன் கைகோர்க்க வேண்டியது அவருக்கு இப்போது கட்டாயமாகியுள்ளது.
ஆனால் இந்தக் கூட்டணிக்கு அவர் போனால் முற்றிலும் அவரது இமேஜ் தகர்ந்து விடும். காரணம், கரூருக்கு முன் நடந்த நாமக்கல் கூட்டத்தில் பேசும் போது பாஜக-அதிமுக கூட்டணி பொருந்தா கூட்டணி என தவெக தலைவர் விஜய் மிக கடுமையாக விமர்சித்து பேசினார். அதிலும் அம்மா அம்மா என்று மேடம் ஜெயலலிதா பெயரைச் சொல்லிக் கொண்டு என்று கடுமையாக விமர்சிக்கவும் செய்திருந்தார். அதோடு, 2026 சட்டசபை தேர்தலில் திமுக-தவெக இடையே தான் போட்டி என்றும் பேசி இருந்தார். அதாவது 3வது இடத்திற்கு தான் அதிமுக போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது என பொருள் படும் விதமாக விஜய் பேசினார்.
இந்த சமயத்தில் தான் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு தான் காரணம் என எதிர்க்கட்சிகள் ஒரு புறம் குற்றம்சாட்ட, விஜய் தரப்பு தான் காரணம் என அரசு தரப்பில் சொல்ல என மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என கிட்டதட்ட விஜய்க்கு ஆதரவாக அதிமுக திரும்பியிருக்கிறது.
இன்னொரு பக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் 8 பேர் கொண்ட எம்பி.,க்கள் குழு, உண்மை கண்டறியும் குழுவாக தமிழகத்திற்கு வருகிறது. அவர்களும் அரசின் அலட்சிய போக்கு தான் காரணம் என்ற ரீதியில் பேட்டி அளித்து வருகிறார்கள்.
தற்போதை சூழலில் தவெக.,விற்கு ஆதரவாக பாஜக, அதிமுக கட்சிகள் பேசி வருகின்றன. இதற்கிடையில், "நாங்கள் இருக்கிறோம்" என மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு புறமும், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஆகியோர் ஆதரவு கரம் நீட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் யாருடைய கரத்தை விஜய் பற்ற போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் எது உண்மை என்றும் தெரியவில்லை. எல்லாமே காற்று வாக்கில் வரும் செய்திகளாகவே இருக்கின்றன.
பாஜக.,வின் ஆதரவை பெறுவது தான் தவெக.,விற்கு சரியாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள். தவெக-அதிமுக கூட்டணி முடிவாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மை தான் என்பது போல், தர்மபுரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு தொகுதியில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ளார். அந்த பகுதியின் பல இடங்களில் விஜய் மற்றும் இபிஎஸ் ஆகியோர் பச்சைத் துண்டு அணிந்து, பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொள்வது போன்ற பேனர்கள் அமைத்து, தவெக கட்சியினர் சார்பில் இபிஎஸ்.,க்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தவெக-அதிமுக கூட்டணி அமைவது உறுதியாகி விட்டதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இது உண்மை தானா? அல்லது தவெக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என தவெக கட்சியினரே விரும்புகிறார்களா? அதன் வெளிப்பாடு தான் இந்த பேனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் கூட தமிழக மக்கள் ஒரு வகையில் நார்மலாக பார்ப்பார்கள்.. ஆனால் பாஜக பக்கம் விஜய் போனால், அவரது அரசியலுக்கே முற்றுப்புள்ளி விழும் அபாயமும் உள்ளது. மிகப் பெரிய இக்கட்டான நிலையில் இருக்கிறார் விஜய். இந்த சவாலான சூழலை எப்படி அவர் சமாளிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.
தவெக தொடர்பான செய்திகளை படிக்க இங்கு சொடுக்கவும்
நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் தங்கம் விலை... இன்று காலையிலேயே உயர்ந்தது!
ஓமன் வாழ் தமிழர்கள் கவனத்திற்கு.. மஸ்கட்டில் தமிழ்நாடு நாள்.. விதம் விதமான போட்டிகள்
அரபிக் கடலில் உருவான.. 2025ம் ஆண்டின் முதல் புயல்.. அச்சுறுத்தும் சக்தி.. மும்பைக்கு எச்சரிக்கை!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 04, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்
கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!
எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?
புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?
விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்
கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
{{comments.comment}}